டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் இன்று நடந்த போராட்டம் பரவலாக கவனம் பெற்றிருக்கிறது. டெல்லி போலீஸ் போராட்டக்காரர்களை தடுக்க எவ்வளவோ முயன்றும் சிலர் டெல்லிக்குள் நுழைந்து போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டக்காரர்கள் கையாண்ட டெக்னிக் என்ன? போலீஸ் எப்படி சமாளித்தது என்பது குறித்து பல சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததுடன், அந்த பகுதியில் தடை உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தது. நேற்று ஆயிரக்கணக்கான டெல்லி காவல் துறையினரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டு ஒட்டுமொத்த பகுதியையும் கண்ட்ரோலில் எடுத்தனர்.
காக்ரோச் ஜனதா பார்ட்டியின் தலைவர் அபிஜித் தீப்கே டெல்லி வந்து இறங்கியவுடன், விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார். தலைவரை கைது செய்துவிட்டால் போராட்டம் நடக்காது என்று நினைத்த போலீசுக்கு.. போராட்டக்காரர்கள் தண்ணி காட்டியிருந்தனர். டெல்லியின் கண்ணாட் பிளேஸ் பகுதியில் உள்ள நகராட்சி பொதுக் கழிவறைகளில் 20க்கும் மேற்பட்ட இளம் போராட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை இரவு முழுவதுமே விடிய விடிய ஒளிந்து இருந்தனர். சனிக்கிழமை காலையில் காவல்துறை சோதனையின் போது, கழிவுறை கதவுகளை உடைத்து உள்ளே ஒளிந்திருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது அவர்கள் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதைவிட ஹைலைட் பங்களா சாஹிப் குருத்வாராவில் நடந்தது. குருத்வாராவுக்குள் போராட்டக்காரர்கள் பலர் முந்தைய நாள் இரவே தஞ்சம் புகுந்தனர். இன்று குருத்வாராவின் நுழைவு வாயில் வழியாக வெளியே வந்த அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத போலீசார்.. அவர்களை பிடிக்க துரத்த.. போராட்டக்காரர்கள் மீண்டும் குருத்வாரா வளாகத்திற்குள் ஓடி மறைந்தனர். இப்படியாக கண்ணாமூச்சி ஆட்டத்தை போலீசாருக்கு காட்டினர். ஒரு கட்டத்தில் டென்ஷனான போலீஸ், போராட்டக்காரர்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டது. ஆனால் உள்ளே இருப்பவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை, உள்ளே முழக்கம் இடுவதும் இல்லை.. எனவே அவர்களுக்கு புகலிடம் தருவதை தடுக்க மாட்டோம். அதேநேரம் வளாகத்திற்குள் காவல்துறையினரை அனுமதிக்கவும் மாட்டோம் எனவும் குருத்வாரா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த காவல்துறை.. போராட்டக்காரர்கள் வெளியே வரும் வரை காத்திருந்து ஒவ்வொருவராக கைது செய்து அழைத்துச் சென்றது. அதேபோல இந்த போராட்ட களத்தில் சிலர், கரப்பான் பூச்சியின் உணர் கொம்புகள் போன்ற வடிவங்களை தங்கள் தலை கவசங்களில் மாட்டிக் கொண்டு வந்து.. நூதன முறையில் எதிர்ப்பை பதிவு செய்தனர். கைது செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டவர்கள் உள்ளே இருந்தபடி 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்றும் 'ஜெய் பீம்' என்றும் முழக்கங்களை எழுப்பினர்.ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி.. சென்னையில் போராடிய இளைஞர்கள் குண்டுக்கட்டாக கைது
சென்னையில் வெடித்த போராட்டம்.. சிஜேபிக்கு ஆதரவாக போராடிய இளைஞர்கள் குண்டுக்கட்டாக கைது