தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா

  • சென்னை: மத்திய அரசின் தேசிய குடும்ப நல ஆய்வு-6 (NFHS-6) அறிக்கை வெளியாகியுள்ளது. 2023-24 காலகட்டத்தில் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. நாட்டின் சுகாதார கட்டமைப்பு, மக்களுக்கு தேவையான சுகாதார திட்டங்கள் கிடைக்கிறதா? என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் பல முக்கிய தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

    Advertisement

    குறிப்பாக குழந்தைகளின் நலன் காக்கும் வகையில் போடப்படும் தடுப்பூசிகள் விகிதத்தில் தமிழ்நாட்டு நிலவரம் என்ன என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய விவரங்கள் பார்க்கலாம்.

    Advertisement

    12-23 மாத வயதுடைய குழந்தைகளில், ஏதேனும் ஒரு தடுப்பூசி பெற்றவர்கள் (%)

    நகர்ப்புறம்: 95.1
    கிராமப்புறம்: 96.9
    மொத்தம் (2023-24): 96.2
    மொத்தம் (2019-21): 98.5

    BCG தடுப்பூசி பெற்ற குழந்தைகள் (12-23 மாதம்)

    நகர்ப்புறம்: 92.4
    கிராமப்புறம்: 96.8
    மொத்தம் (2023-24): 95.0
    மொத்தம் (2019-21): 97.6

    போலியோ தடுப்பூசியின் 3 டோஸ்கள் பெற்ற குழந்தைகள்

    நகர்ப்புறம்: 88.6
    கிராமப்புறம்: 94.5
    மொத்தம் (2023-24): 92.1
    மொத்தம் (2019-21): 91.5

    பென்டாவேலண்ட் (Pentavalent)தடுப்பூசியின் 3 டோஸ்கள்

    நகர்ப்புறம்: 90.1
    கிராமப்புறம்: 94.8
    மொத்தம் (2023-24): 92.8
    மொத்தம் (2019-21): 94.9

    தட்டம்மை (Measles) தடுப்பூசியின் முதல் டோஸ் (MCV)

    நகர்ப்புறம்: 93.4
    கிராமப்புறம்: 95.2
    மொத்தம் (2023-24): 94.5
    மொத்தம் (2019-21): 95.8

    Advertisement

    தட்டம்மை தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் (MCV) (24-35 மாத குழந்தைகள்)

    நகர்ப்புறம்: 74.3
    கிராமப்புறம்: 76.4
    மொத்தம் (2023-24): 75.6
    மொத்தம் (2019-21): 75.0

    ஹெபடைட்டிஸ்-B (Hepatitis-B) பிறப்பின்போது போடப்படும் தடுப்பூசி பெற்றவர்கள்

    நகர்ப்புறம்: 87.8
    கிராமப்புறம்: 92.6
    மொத்தம் (2023-24): 90.6
    மொத்தம் (2019-21): 84.9

    ரோட்டா வைரஸ் (Rotavirus) தடுப்பூசியின் 3 டோஸ்கள் (12-23 மாதம்)

    நகர்ப்புறம்: 87.3
    கிராமப்புறம்: 87.6
    மொத்தம் (2023-24): 87.4
    மொத்தம் (2019-21): 66.4

    கடந்த 6 மாதங்களில் வைட்டமின்-A ஒரு டோஸ் பெற்ற குழந்தைகள்

    நகர்ப்புறம்: 69.9
    கிராமப்புறம்: 72.4
    மொத்தம் (2023-24): 71.4
    மொத்தம் (2019-21): 68.2

    தடுப்பூசிகளை அரசு சுகாதார நிலையங்களில் பெற்ற குழந்தைகள் சதவீதம்

    Advertisement

    நகர்ப்புறம்: 86.1
    கிராமப்புறம்: 95.2
    மொத்தம் (2023-24): 91.5
    மொத்தம் (2019-21): 89.8

    தடுப்பூசிகளை தனியார் சுகாதார நிலையங்களில் பெற்றவர்கள் (%)

    நகர்ப்புறம்: 13.5
    கிராமப்புறம்: 4.6
    மொத்தம் (2023-24): 8.2
    மொத்தம் (2019-21): 10.1

    ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெரும்பாலான குழந்தைகள் தடுப்பூசிகளை பெற்று இருப்பது தமிழகத்தில் அரசு சுகாதார கட்டமைப்பு வலுவாக இருப்பதை காட்டுவதாக அமைந்துள்ளது. பயனாளிகளை தவறவிடாமல் கிராம அளவிலும் மருத்துவ பணியாளர்கள் மைக்ரோ லெவலில் செய்யும் பணிகளை கிடைத்த பலனாக அமைந்துள்ளது.

    English Summary

    Child Vaccination: The NFHS-6 report has revealed fresh insights into child immunization coverage across India. The survey highlights Tamil Nadu’s vaccination performance, access to healthcare services, and the extent of full immunization among children, offering a key measure of public health progress.