வியட்நாம் விபத்து! Life Jacket அணிந்தும் 15 பேர் பலியானது எப்படி? உயிர் தப்பியவர் பரபரப்பு பேட்டி

  • டெல்லி: வியட்நாம் நாட்டில் படகில் பயணம் செய்தவர்கள் உயிர் காக்கும் கவசம் அணிந்திருந்த போதிலும் படகு விபத்தில் 15 பேர் பலியானது எப்படி என்பது குறித்து உயிர் தப்பிய பயணி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    வியட்நாம் நாட்டில் ஃபூ குவோக் தீவிற்கு ஒரு படகில் பயணம் செய்த 15 பேர் படகு கவிழ்ந்த விபத்தில் பலியான சோகம் நடந்துள்ளது.

    Advertisement

    லாவா செல்போன் நிறுவனம் சார்பில் விற்பனை இலக்கை அடைந்த சேல்ஸ் மேனேஜர்களை வியட்நாமுக்கு அந்த நிறுவனமே இலவச சுற்றுலா அழைத்துச் சென்றது.

    அவ்வாறு சென்றதில் இரு படகுகளில் ஃபூ குவோக் தீவை சுற்றி பார்க்க சென்றனர். அப்போது அவர்கள் புறப்பட்ட 400 மீட்டர் தூரத்தில் முதலில் சென்ற படகு பழுதாகி நின்றது. பழுதை பார்ப்பதற்குள் பலத்த காற்று காரணமாக அந்த படகு கடலில் கவிழ்ந்தது.

    அதில் இருந்த 15 பேர் பலியாகிவிட்டனர். மீதமிருந்த 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முருகபிரபுவின் நண்பரும் பிசினஸ் பார்ட்னருமான நிர்மல் குமார் விபத்து குறித்து என்ன கூறினார் என்பதை பார்க்கலாம்.

    Advertisement

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மூடிய படகில் 39 பேர் பயணம் செய்தோம். அப்போது திடீரென வீசிய அலையால் படகு 3 நிமிடங்களுக்குள் கவிழ்ந்துவிட்டது. இதையடுத்து படகின் முன்புறத்தில் அமர்ந்திருந்தவர்கள் முன்புற ஜன்னல் வழியாக வெளியே வந்துவிட்டனர். ஆனால் படகின் பின்புறத்தில் அமர்ந்திருந்தவர்கள்தான் அந்த 15 பேர்!

    எங்கள் நிறுவனம் சார்பில்தான் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் உயிர் காக்கும் கவசங்களை அணிந்திருந்தோம். ஆனால் மூடப்பட்ட படகு என்பதாலும் காற்றில் ஆடி படகு கவிழ்ந்துவிட்டதாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

    இந்த விபத்தில் பலியான வினய் குமார், வேலூரை சேர்ந்தவர். இவர் சைதாப்பேட்டை கன்னிகா பரமேஸ்வரி தெருவை சேர்ந்தவர். மெயின் பஜாரில் சிறிய நகைக் கடையையும் நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் லாவா நிறுவனத்தின் வேலூர் விநியோகஸ்தராகவும் இருந்து வருகிறார்.

    Advertisement

    இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் 13 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். வியட்நாம் சுற்றுலா சென்ற வினய்குமார் நேற்று காலைதான் மனைவி, மகளுடன் போனில் பேசினாராம். அப்போது ஞாயிற்றுக்கிழமை ஊர்த திரும்பிவிடுவேன் என கூறியிருந்தாராம். ஆனால் மாலையில் அவர் படகு விபத்தில் இறந்துவிட்டதாக வந்த செய்தியை கேட்ட மனைவியும் மகளும் கதறி அழுதனர். இவர்கள் எல்லாருமே கடந்த 7 ஆம் தேதி சென்னையில் இருந்து ஒரு குழுவாக வியட்நாமுக்கு சுற்றுலா சென்றனர்.

    English Summary

    How the tourist lost their live even they wear life jacket in Vietnam boat accident? Eye witness and who luckily escape from the boat tragedy explains.