டெல்லி: பாஜகவில் தொலைக்காட்சி விவாதங்களில் அதிரடி பேச்சுக்கு பெயர் பெற்ற அந்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா திடீரென்று பாஜகவில் இருந்து விலகினார். தற்போது அவர் வாடகை செலுத்த கூட சிரமப்படுகிறார். இதுதொடர்பாக ஷெசாத் பூனாவாலா உருக்கமாக கூறியுள்ளார்.
பாஜகவில் அதிரடியான பேச்சுகளுக்கு பெயர் பெற்றவர்களில் ஒருவர் ஷெசாத் பூனாவாலா. இவர் பாஜகவில் தேசிய செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த மாத இறுதியில் ஷெசாத் பூனாவாலா திடீரென்று தனது எக்ஸ் பக்கத்தின் முகப்பு பக்கத்தில் பாஜகவின் செய்தி தொடர்பாளர் என்பதை நீக்கினார். அதேவேளையில் வாழ்நாள் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடியின் பின்தொடரும் நபர் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் ஷெசாத் பூனாவாலா பாஜகவில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுபற்றி அவர் விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில் தான் 2 நாளைக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகுவதாக ஷெசாத் பூனாவாலா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், ''கடுமையான நிதி மற்றும் தனிப்பட்ட சூழல்கள் காரணமாக பாஜகவின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலககிறனே். எனது ராஜினாமா கடிதத்தை உடனடியாக ஏற்றுக்கொள்ள மறுத்து, எனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கட்சி கேட்டுக்கொண்டது மிகவும் நெகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக நான்ற நன்றி உணர்வுடன் இருக்கிறேன். இருப்பினும் நான் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதில் உறுதியாக இருக்கிறேன். எந்தவித மனக்கசப்பும் இன்றி நன்றியுணர்வுடனனும் விலகுகிறேன். பிரதமர் நரேந்திர மோடி ஜி, கட்சித் தலைவர் நிதின் நபின் ஜி, மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜி, பொதுச் செயலாளர் (அமைப்பு) ஸ்ரீ பி.எல். சந்தோஷ் ஜி போன்ற மூத்த தலைவர்கள் எனக்கு வழங்கிய அனைத்து வாய்ப்புகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நிதி தேவையால் நான் தனியார் துறையில் பணியாற்ற உள்ளேன். சாத்திமான இடங்களில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் தொலைநோக்கு திட்ட்களுக்கு ஆதரவு அளிக்கிறேன்'' என்று கூறியிருந்தார். இந்நிலையில் தான் ஷெசாத் பூனாவாலா குடியிருக்கும் வீட்டுக்கு கூட வாடகை பணம் கொடுக்க முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக ஷெசாத் பூனாவாலாவே கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு ஷெசாத் பூனாவாலா அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: ''பாஜக உட்பட எந்தவொரு அரசியல் கட்சியும் தங்களின் செய்தி தொடர்பாளர்களுக்கு சம்பளம் வழங்குவது இல்லை. இதனால் என்னால் கட்சியில் இருந்து கொண்டே எனது பிற செலவுகளை தவிர்க்க முடியவில்லை. நான் வீட்டு வாடகை செலுத்த வேண்டும். நான் பாஜகவை சேர்ந்தவன் என்பதற்காக வீட்டு உரிமையாளர் எனக்கு இலவசமாக வசிக்க வீடு தரப்போவது இல்லை. அவர் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலேயே வாடகை கேட்கிறார். அரசியல் கட்சிகள் தங்கள் தொண்டர்களுக்கு ஊதியம் வழங்குவதில்லை. என்னையோ அல்லது வேறு எந்த தொண்டரையோ காப்பாற்றுவது பாஜகவின் பணி அல்ல. இது எனக்கு நன்றாக தெரியும். ஒரு அரசியல் இயக்கத்தில் இணையும்போது அது ஒரு சாதாரண வேலை அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கொள்க, ஒரு நபர் அல்லது அமைப்பு மீதான பற்றின் காரணமாகவே ஒருவர் தொண்டராக மாறுகிறார். அந்த மூன்று விஷயங்களும் என்னிடம் இப்போதும் உள்ளன. பாஜகவிலிருந்து தான் திடீரென விலகியதற்கு நிதி நெருக்கடியே முக்கிய காரணம் என்று வலியுறுத்திய ஷெஹ்சாத் பூனாவல்லா, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி 2021-ல் பாஜகவில் இணைந்தவர் ஆவார். பெரும்பாலான அரசியல்வாதிகள் 'லேட்டா' (சலுகைகளைப் பெறுபவர்கள்) அல்லது 'பேட்டா' (அரசியல்வாதியின் மகன்) ஆகிய வகைகளில் அடங்குவதைச் சுட்டிக்காட்டிய அவர், தான் அந்த இரண்டு வகைகளிலும் சேராதவர் என்பதால், தன்னைத் தக்கவைத்துக்கொள்ள வழிகளைத் தேட வேண்டியிருந்ததாகக் கூறினார். அரசியல்வாதிகள் அனைவரும் 'லேட்டா' (சலுகைகளை பெறுபவர்கள்) அல்லது 'பேட்டா' (அரசியல்வாதியின் மகன்) வகையை சேர்ந்தவர்கள் என்று மக்கள் நினைக்கின்றனர். "என்னைப்போன்ற முதல் தலைமுறை, நவீன கால அரசியல்வாதிகளும் உள்ளனர். எந்தவொரு அரசியல் பின்னணியிலிருந்தும் நான் வரவில்லை என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. சச்சின் பைலட் போன்றவர்களையோ அல்லது மற்ற அரசியல் வாரிசுகளையோ பார்த்து பழகி விட்டதால், எல்லோரும் அத்தகைய வாழ்க்கை முறையை கொண்டிருப்பார்கள் என்று மக்கள் தவறாக கருதுகிறார்கள். நான் ராஜினாமா முடிவை திடீரென்று எடுக்கவில்லை. கடந்த 2024ம் ஆண்டில் இருந்தே யோசித்து வந்தேன். இப்போது தான் ராஜினாமா செய்துள்ளேன். நான் ராஜினாமா முடிவை எடுத்தவுடன் கட்சி சார்பில் என்னை தொடர்பு கொண்டனர். எனக்கு உதவி செய்ய முன்வந்தனர். ஆனால் அதற்கு என் மனசாட்சி இடம் அளிக்கவில்லை. பாஜக என்பது எனக்கு ஒரு வேலைவாய்ப்பு தரும் அலுவலகம் அல்ல. அது எனக்கு ஒரு கொள்கை சார்ந்த களம். பாஜகவின் கொள்கைக்கோ அல்லது மோடிஜியின் தொலைநோக்குப் பார்வைக்கோ அர்ப்பணிப்புடன் செயல்பட, நான் அக்கட்சியில் ஒரு பதவியில் இருக்க வேண்டிய அவசியமில்லை'' என்று கூறியுள்ளார்.