“முட்டாள்கள்தான் மாணவர்களின் பேச்சை கேட்க மாட்டார்கள்!” ராகுல் காந்தி பேச்சால் மக்களவையில் சலசலப்பு!

  • டெல்லி: போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்வதை கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று மக்களவையில் பேசிய ராகுல் காந்தி முட்டாள்கள்தான் மாணவர்களின் பேச்சை கேட்க மாட்டார்கள் என பாஜகவை விமர்சித்திருக்கிறார்.

    Advertisement

    போராட்ட களத்தில் 18 வயது மாணவியுடன் தான் பேசியது குறித்து மக்களவையில் ராகுல் காந்தி விவரித்தார். "அந்த மாணவி ஒரு குறிப்பிட்ட தரப்பினரை அகங்காரம் பிடித்தவர்கள் என்றும், தங்களுக்கு எல்லாம் தெரியும்.. தாங்கள்தான் கடவுள் என்று நினைத்துக்கொண்டிருப்பதாக சொன்னார். சரி அப்படிப்பட்டவர்களை நீங்கள் என்வென்று அழைப்பீர்கள்? என நான் கேட்டேன். அப்படிப்பட்டவர்கள் முட்டாள்கள் என்று அந்த மாணவி சொன்னார்" என்று ராகுல் காந்தி பேசினார்.

    Advertisement

    ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, பேச வந்த விஷயத்தை மட்டும் பேச வேண்டும் என்று கூறினார். இதனால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

    தொடர்ந்து ராகுல் காந்தி பேசியதாவது, "நமது இளைஞர்கள் செய்த காரியத்தை கண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும். இளைஞர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக துணிச்சலுடன் குரல் கொடுத்திருக்கிறார்கள். இன்று இந்தியா சக்கரவியூகத்தில் சிக்கியிருக்கிறது. தாமரை சின்னமே அந்த சக்கர வியூகத்தின் அடையாளம். இதில் மூன்று பெரிய சக்திகள் இருக்கின்றன.

    Advertisement

    1. பெரும் தொழிலதிபர்கள் - ஏகபோக அதிகாரம்
    2. சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற நிறுவனங்கள்
    3. அரசியல் அதிகாரம்

    இந்த அரசு இளைஞர்களை வேலையில்லா திண்டாட்டம், வினாத்தாள் லீக் எனும் சக்கர வியூகத்தில் சிக்க வைத்திருக்கிறது. இளைஞர்கள் அபிமன்யு அல்ல.. அவர்கள் அர்ஜுனர்கள். சக்கர வியூகத்தை உடைத்துக்கொண்டு வருவார்கள்" என்று பேசியிருக்கிறார்.

    English Summary

    Rahul Gandhi: Opposition parties have been consistently urging that the move to arrest the protesting students be dropped. Against this backdrop, Rahul Gandhi, speaking in the Lok Sabha today, criticized the BJP, stating that only fools would refuse to listen to what the students have to say.