விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல்

  • டெல்லி: "மக்களை வைத்தே நெரேட்டிவ் அமைப்பது" என்பது ஒருவகையான ஜனநாயகப் புரட்சி. பணமோ, அதிகாரமோ, பாரம்பரியமோ இல்லாத ஒரு சூழலிலும், மக்களின் மனநிலையை சரியாகப் புரிந்துகொண்டு டிஜிட்டல் தளத்தை ஆயுதமாகப் பயன்படுத்தினால், எவ்வளவு பெரிய கோட்டையையும் தகர்க்கலாம் என்பதை விஜய் சாதித்துக் காட்டியுள்ளார். தேசிய அளவில் கரப்பான் பூச்சி பார்ட்டியும் இதே பாணி அரசியலை தான் செய்கிறது.. 2029ல் இப்படி நகர்ந்தால், அது பாஜகவிற்கு பெரிய ஆபத்தாகவே முடியும்.

    Advertisement

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், "வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் போல சமூக வலைதளங்களிலும், ஆர்.டி.ஐ மூலமும் அமைப்புகளைத் தாக்குகிறார்கள்" என்று பேசியதற்கு உடனடியாகப் பொதுவெளியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் "நான் போலி பட்டதாரிகளைத் தான் அப்படிச் சொன்னேன்" என்று மறுநாளே விளக்கம் அளித்த போதிலும், மிகப்பெரிய எதிர்வினைகள் நடந்துள்ளது.
    தலைமை நீதிபதி தனிப்பட்ட முறையில் பேசிய பேச்சு, இப்போது பாஜக அரசின் மீதான பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு ரீதியான விமர்சனமாக மாறி, அரசுக்குத் தேவையில்லாத அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

    Advertisement

    ஏனெனில் கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி என்ற ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டது. ஒரு சாதாரண நையாண்டியாக ஆரம்பித்த இந்த 'சிஜேபி' (CJP) இயக்கம், இப்போது இந்தியாவின் மிகப்பெரிய ஆளுங்கட்சியான பாஜகவின் டிஜிட்டல் தளத்தையே ஆட்டிப்படைத்து வருவது ஒரு மாபெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வெறும் ஐந்து நாளில் 2 கோடி பேர் அதனை பின்பற்றுகிறார்கள். இந்த கட்சியில் உள்ளவர்கள் இப்போது அரசியல் ரீதியாக பாஜகவிற்கு எதிராக விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளார்கள். இது திமுக, அதிமுகவை வீழ்த்த விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல் அரசியலுடன் ஒத்துப்போகிறது. ஏனெனில் விஜய்யை ஆதரித்த அதே ஜென் சி தலைமுறை தான் இப்போது கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டியை ஆதரித்துள்ளது.

    Advertisement

    திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிட ஆளுமைகளின் 50 ஆண்டுகால ஆதிக்கத்தை உடைத்து, எந்தவிதப் பாரம்பரிய அரசியல் பின்புலமும் இல்லாமல், 1.72 கோடி வாக்குகளைப் பெற்று விஜய் முதலமைச்சராக அரியணை ஏறியிருப்பது இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு தனித்துவமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த 'ஜென் சி' தலைமுறையின் எழுச்சியும், டிஜிட்டல் புரட்சியும் தேசிய அளவில் பாஜகவிற்கு எவ்வாறு சவாலாக மாறப்போகிறது என்பதை பார்க்கலாம்.

    பொதுவாகத் தமிழ்நாட்டுத் தேர்தல் என்றாலே பணபலம், பிரியாணி, குவாட்டர் என்ற பிம்பம் இருந்தது. ஆனால், எந்தவிதப் பணபலமும் இல்லாமல், தங்களின் எதிர்காலத்திற்காகவும், வேலைவாய்ப்பு மற்றும் மாற்றத்திற்காகவும் இந்தத் தலைமுறை 'தன்னெழுச்சியாக' வாக்குகளை விஜய் என்ற ஒற்றை நபரை நம்பி விசிலுக்கு போட்டிருக்கிறது. வேட்பாளர் யார் என்றே தெரியாமல் போட்டார்கள் என்பது தான் ஹைலைட்.

    Advertisement

    தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவிற்கு நேர்ந்த அதே நிலைதான் 2029-இல் தேசிய அளவில் பாஜகவிற்கும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக விமர்சனங்களை வைக்கிறார்கள். பாஜகவின் மிகப்பெரிய பலமே அவர்களின் சமூக வலைதளக் கட்டமைப்பு தான். ஆனால், இப்போது உருவாகி வரும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' போன்ற டிஜிட்டல் இயக்கங்கள் காட்டுவது என்னவென்றால், இளைஞர்கள் நினைத்தால் ஆளுங்கட்சியின் அதே டிஜிட்டல் ஆயுதத்தை வைத்தே அவர்களை நிலைகுலைய வைக்க முடியும் என்பது தான்.

    தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் மீது இளைஞர்களுக்கு இருந்த அதே அதிருப்திதான், இன்று தேசிய அளவில் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மத்திய பாஜக அரசு மீதும் உருவாகி வருகிறது. இந்த அதிருப்தி எப்போது வேண்டுமானாலும் ஒரு 'டிஜிட்டல் புரட்சியாக' வெடிக்கும் அபாயம் இருப்பதாக விமர்சிக்கிறார்கள்.

    Advertisement

    தமிழ்நாட்டில் எப்படி ஒவ்வொரு வீட்டிலும் விஜய்க்கு ஒரு அமைதியான ஆதரவு அலை இருந்ததோ, அதேபோல தற்போதைய பாஜக் அரசின் திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வர்க்கம் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஒரு 'அமைதியான எதிர்ப்பு அலை' தேசிய அளவில் உருவாகி வருவதாகவும் சில அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    பழைய தலைமுறை அரசியல்வாதிகள் பார்க்காத ஒரு புதுவகை டிஜிட்டல் மற்றும் மீம்ஸ் அரசியலை இந்த 'ஜென் சி' தலைமுறை கையில் எடுத்துள்ளது. இவர்களைப் பணத்தாலோ அல்லது அதிகாரத்தாலோ கட்டுப்படுத்துவது மிகக் கடினம் ஆகும் எனவே, தமிழ்நாட்டில் திராவிடக் கோட்டைகளை இந்த டிஜிட்டல் புரட்சி தகர்த்தது போல, 2029-இல் தேசிய அளவில் பாஜகவின் கோட்டைக்கு ஆபத்து வரலாம் என்கிறார்கள்.

    Advertisement

    தமிழ்நாட்டில் இப்போது நடந்திருப்பது, "மக்களை வைத்தே நெரேட்டிவ் அமைப்பது" என்பது ஒருவகையான ஜனநாயகப் புரட்சி. பணமோ, அதிகாரமோ, பாரம்பரியமோ இல்லாத ஒரு சூழலிலும், மக்களின் மனநிலையை சரியாகப் புரிந்துகொண்டு டிஜிட்டல் தளத்தை ஆயுதமாகப் பயன்படுத்தினால், எவ்வளவு பெரிய கோட்டையையும் தகர்க்கலாம் என்பதை விஜய் சாதித்துக் காட்டியுள்ளார். தேசிய அளவில் கரப்பான் பூச்சி பார்ட்டியும் இதே பாணி அரசியலை தான் செய்கிறது. எனவே 2029 தேர்தல் என்பது பாஜகவிற்கு சிக்கலாக முடியும்.

    English Summary

    The 'Tamil Nadu Model' Executed by Vijay: If Replicated by the 'Cockroach Janata Party,' It Spells Trouble for the BJP.