‘வந்தே மாதரம்’ பாடலை தேசிய கீதத்துக்கு முன்பாகவே பாட வேண்டும்.. அமித்ஷா உத்தரவு

  • டெல்லி: மத்திய மற்றும் மாநில அரசு நிகழ்ச்சிகளில் முதலில் 'வந்தே மாதரம்' எனும் தேசிய பாடல் பாடப்பட வேண்டும். அதன்பிறகு தான் தேசியக்கீதம் பாட வேண்டும் என்று என்று மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில - யூனியன் பிரதேசங்களுக்கும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதல்வர் விஜய் பதவியேற்பு விழா மற்றும் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்றார். அப்போது முதலில் 'வந்தே மாதரம்' எனும் தேசிய பாடலும், அதன்பிறகு தேசிய கீதமும், பிறகு தமிழ் தாய் வாழ்த்து பாடலும் இசைக்கப்பட்டது.

    Advertisement

    இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தான் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவில் அரசு நிகழ்ச்சிகளில் தேசிய பாடலான 'வந்தே மாதரம்', தேசிய கீதம் மற்றும் மாநில மொழிப்பாடல்கள் பாடுவது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் நெறிமுறையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ஆளுநர் அலுவலங்களுக்கும், அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களுக்கும் இதுதொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஜூலை 9ம் தேதியிட்டு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும் உத்தரவில் உள்ள சாரம்சங்கள் பின்வருமாறு:

    Advertisement

    ஜனாதிபதி நிகழ்ச்சி மற்றும் பிற அரசுகள் ஏற்பாடு செய்யப்படும் ஜனாதிபதி நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி வரும்போதும், புறப்படும்போதும் முதலில் 'வந்தே மாதரம்' எனும் தேசிய பாடல் பாடவோ அல்லது இசைக்கவோ வேண்டும். அதனை தொடர்ந்து தேசிய கீதம் பாடவோ, இசைக்கவோ வேண்டும். ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் நிகழ்ச்சிகளின்போதும் இது பின்பற்றபப்பட வேண்டும்.

    அதேவேளையில் குறிப்பிட்ட ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசரத்தில் நடக்கும் அரசு விழா, நிகழ்வின்போதும் ஆளுநர், துணை நிலை ஆளுநர் பங்கேற்கும்போதும், அங்கிருந்து புறப்படும்போதும் முதலில் தேசிய பாடலான வந்தே மாதரமும், அதன்பிறகு தேசிய கீதமும் இசைக்கப்படவோ அல்லது பாடப்படவோ வேண்டும்.

    Advertisement

    தேசிய பாடல் (வந்தே மாதரம்) மற்றும் தேசிய கீதம் பாடும் போதோ அல்லது இசைக்கும்போதே சரியான உச்சரிப்பு மற்றும் சரியான ஒலிப்புடன் இருக்க வேண்டும். இதனை துல்லியமாக பின்பற்ற வேண்டும். சரியான இசை, உச்சரிப்பு தொடர்பான விவரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    சில மாநிலங்களில் மாநில பாடலுடன் (தமிழகத்தில் தமிழ்தாய் வாழ்த்து) தேசிய கீதம், தேசிய பாடல் இசைக்கப்படுகிறது. இப்படி மாநில பாடலுடன் தேசிய பாடல், தேசிய கீதம் பாடப்படும்போதோ அல்லது இசைக்கப்படும்போதோ முதலில் 'வந்தே மாதரம்' தேசிய பாடலும், அதைத்தொடர்ந்து தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும்'' என அமித்ஷாவின் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    இருப்பினும் மாநில பாடலுடன் தேசிய பாடல், தேசிய கீதம் பாட வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்தாலும் கூட மாநில பாடலை எந்த இடத்தில் பாட வேண்டும் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மாநில பாடலை முதலில் பாடுவதா? அல்லது கடைசியில் பாட வேண்டுமா? என்பது பற்றி இந்த உத்தரவில் தெளிவுப்படுத்தப்படவில்லை. இது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    The Union Ministry of Home Affairs has issued a decisive directive mandating that the national song ‘Vande Mataram' be sung first at Central and State government events, followed by the National Anthem, and only then should individual states sing their respective state songs. Guidelines have been issued to all states and Union Territories requiring strict adherence to this protocol.