ஞானேஷ் குமாருக்கு சிக்கல்? SIT விசாரணை கோரி உச்சநீதிமன்றம் போன விவகாரம்.. பரபரப்பு

  • டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை கோரியும், SIR மூலமாக 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்றும் கூறியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி என்பவர் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டள்ளதாவது:

    Advertisement

    ''தேர்தல் செயல்முறை தொடர்பாக குறிப்பாக SIR நடவடிக்கையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற 2 தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

    இதனால் 2 தேர்தல்ஆணையர்களின் ஒப்புதல் இன்றி ஞானேஷ் குமார் மேற்கொண்டதாக கூறப்படும் முடிவுகள், வழிககாட்டுதல்கள் மற்றும் சாப்ட்வேர் மாற்றங்கள் உள்ளிட்டவை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த நடவடிக்கைகளை செல்லாது என அறிவிக்க வேண்டும். ஞானேஷ் குமார் தன்னிச்சையாக எடுத்த முடிவுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என அறிவிக்க வேண்டும். உண்மையான விண்ணப்ப படிவம் 6யை நடைமுறைக்கு கொண்டுவ ர வேண்டும்.

    Advertisement

    அதுமட்டுமின்றி நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின்போது நீக்கப்பட்டுள்ள 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் எப்படி நீக்கப்பட்டன? என்பது பற்றி எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழுவிற்கு உத்தரவிட வேண்டும்.

    அதோடு 'மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்'படி, கடமை தவறியதாக கூறப்படும் ஞானேஷ் குமார், மூத்த துணை தேர்தல் ஆணையர் மணிஷ் கார்க் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைமை இயக்குநர் சீமா கண்ணா ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Chief Election Commissioner Gyanesh Kumar: Advocate Shailendra Mani Tripathi has filed a Public Interest Litigation (PIL) in the Supreme Court seeking action against Election Commissioner Gyanesh Kumar and demanding the constitution of a Special Investigation Team (SIT) to probe the deletion of 13 crore voters' names.