டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு

  • டெல்லி: 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, "இந்தியா கூட்டணி" கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் தொடங்கிய இந்த கூட்டத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, கேசி வேணுகோபால், அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ், திருமாவளவன், வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    Advertisement

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் - திமுக இடையே கூட்டணி முறிந்தது. தவெகவுடன் கூட்டணி வைத்தது காங்கிரஸ் செய்த துரோகம் என்று திமுக விமர்சித்து வந்த நிலையில், "இந்தியா கூட்டணி" ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காது என்று திமுக அறிவித்துள்ளது. "இந்தியா கூட்டணி"யில் முக்கிய கட்சியாக அங்கம் வகித்த திமுக புறக்கணித்து இருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது.

    Advertisement

    இந்தியா கூட்டணி ஆலோசன கூட்டம்

    மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பெருத்த பின்னடைவை சந்தித்துள்ளார். 5 மாநில சட்டமன்ற தேர்தலால் இத்தகைய அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ள சூழலில், இன்று நடைபெற்ற "இந்தியா கூட்டணி" கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. மொத்தம்ம் 23 கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றன. திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் பங்கேற்கவில்லை.

    இந்த கூட்டத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, கேசி வேணுகோபால், அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ், திருமாவளவன், வைகோ, உமர் அப்துல்லா, சுப்ரியா சுலே, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 2029 பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்கால செயல் திட்டம் குறித்து "இந்தியா கூட்டணி" அணி இந்தக் கூட்டத்தில் விவாதித்தாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    விவாதிக்கப்பட்டது என்ன?

    தேசிய பிரச்சினைகளில் மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்க ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது பற்றி விவாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்து நடைபெற உள்ள மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டு வருவதால் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதனை ஒருங்கிணைந்து முறியடிப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் விஜய்யின் தவெக பங்கேற்கவில்லை. காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள தவெக பங்கேற்காதது குறித்து விளக்கம் அளித்த காங்கிரஸ் நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுபினர்கள் உள்ள கட்சியை மட்டும்தான் அழைத்து இருப்பதாக தெரிவித்து உள்ளன.

    English Summary

    INDIA alliance will hold a crucial meeting in New Delhi today amid the DMK’s decision to boycott the event and political setbacks faced by Mamata Banerjee. Opposition parties are expected to discuss future strategy, Parliament coordination and preparations for the 2029 Lok Sabha elections.