இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம்

  • டெல்லி: இந்தியா தற்போது சொந்தமாக 5ம் தலைமுறை விமானத்தை தயாரிக்கும் திட்டத்தில் சீரியஸாக இறங்கியிருக்கிறது. இப்படி இருக்கையில், 6ம் தலைமுறை விமான திட்டத்திற்காக பிரான்ஸ் நம்மிடம் வந்திருக்கிறது. இது இந்தியாவுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    உலக நாடுகள் அனைத்தும் போர் விமானங்களை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக பக்கத்தில் இருக்கும் சீனாவை எடுத்துக்கொள்ளுங்கள் அந்நாட்டிடம் 5ம் தலைமுறை போர் விமான்கள் இருக்கின்றன. இப்போது 6ம் தலைமுறை விமானங்களுக்காக ரெடியாகி வருகிறது.

    Advertisement

    6ம் தலைமுறை விமானங்கள்

    6ம் தலைமுறை விமானங்கள் என்பது தலைவலி பிடித்த வேலை. தனி நாடாக செய்வது என்பது செலவு அதிகம் பிடிக்கும். எனவே இரண்டு நாடுகள் சேர்ந்து செய்து, செலவுகளை ஈடுகட்டிருக்கொள்ளலாம். அப்படித்தான் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் ஸ்பெயின் என 3 நாடுகள் சேர்ந்து இந்த திட்டத்தை கையில் எடுத்தன. பிரான்ஸை பொறுத்தவரை டசால்ட் நிறுவனம் இருக்கிறது. இதுதான் ரபேல் விமானங்களை தயாரித்தது.

    ஏர் பஸ்

    ஜெர்மனியிடம் ஏர் பஸ் நிறுவனம் இருக்கிறது. இன்றைய தேதியில் உலகில் பறக்கும் பயணிகள் விமானங்களில் சரிபாதி, இந்த நிறுவனத்தினுடையதுதான். எனவே இந்த காம்போ சரிபட்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு FCAS என்றும் பெயரிடப்பட்டது. ஆனால், இங்குதான் பிரச்சனையே வெடித்தது.

    Advertisement

    கலைந்த FCAS

    அதாவது, இந்த திட்டத்தில் யார் கை ஓங்கியிருக்க வேண்டும் என்று சண்டை வந்தது. ஒரு உறையில் இரண்டு வாள் இருக்க முடியாது என்பதால், பிரச்சனை பெரியதாக வெடித்தது. டசால்ட் நிறுவனம் தன்னுடைய தொழில்நுட்ப ரகசியங்களை ஏர் பஸ் நிறுவனத்துடன் பகிர்ந்துக்கொள்ள முன் வரவில்லை. ஏர் பஸ் நிறுவனமும் இந்த விஷயத்தில் விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை. எனவே, FCAS திட்டத்திலிருந்து வெளியேறுவதாக 3 நாடுகளும் தெரிவித்துள்ளன.

    இந்தியாவுக்கான வாய்ப்பு

    இதுதான் இந்தியாவுக்கான வாய்ப்பு வாசலை திறந்துவிட்டிருக்கிறது. அதாவது பிரான்ஸ் நிறுவனம் இந்தியாவுடன் இணைந்து 6ம் தலைமுறை விமானத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறது. 6ம் தலைமுறை தொழில்நுட்பங்களை உருவாக்க பில்லியன் கணக்கில் நிதி மற்றும் ஒரு பெரிய சந்தை தேவை. பிரான்சுக்குத் தற்போது ஒரு வலுவான, பொருளாதார ரீதியாகப் பணக்கார, மற்றும் நம்பகமான சர்வதேசக் கூட்டாளி தேவைப்படுகிறது. எனவேதான் அந்நாடு இந்தியாவை தேர்ந்தெடுத்திருக்கிறது.

    Advertisement

    என்ன லாபம்

    இந்தியாவை பொறுத்தவரை, நாம் ஏற்கனவே தனது சொந்த 5-ஆம் தலைமுறை போர் விமானமான AMCA திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். பிரான்சுடன் இணைவதன் மூலம், இந்தத் திட்டத்தை இன்னும் வேகமாக, 6-ஆம் தலைமுறை தொழில்நுட்பங்களுடன் உலகத் தரத்திற்கு நம்மால் உயர்த்த முடியும்.

    இந்தியப் போர் விமானங்களுக்குத் தேவையான சக்தி வாய்ந்த 110kN ஜெட் இன்ஜின்களை உருவாக்க பிரான்சின் சஃப்ரான் நிறுவனத்துடன் இந்தியா ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. FCAS முறிவால், பிரான்ஸ் தனது இன்ஜின் தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் முழுமையாகப் பகிர்ந்துகொள்ள அதிக ஆர்வம் காட்டும்.

    இந்திய விமானப்படை மற்றும் கடற்படை ஏற்கனவே ரஃபேல் மற்றும் ரஃபேல்-எம் விமானங்களைப் பயன்படுத்தி வருவதால், இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை நிறுவனங்களுக்கு இடையே ஏற்கனவே சிறந்த இணக்கம் உள்ளது. எனவே இந்த காம்போ ஒர்க் ஆகும் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

    English Summary

    India has now seriously embarked on a project to manufacture its own fifth-generation aircraft. Amidst this, France has approached India regarding a sixth-generation aircraft project. This is viewed as a major opportunity for India.