எங்க விஷயத்துல தலையிடாதீங்க.. சர்வதேச நீதிமன்றத்திற்கு இந்தியா எச்சரிக்கை! உற்று நோக்கும் உலக நாடுகள்!

  • டெல்லி: சிந்த நதிநீர் பங்கீடு விஷயத்தில் சர்வதேச நடுவர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை புறக்கணித்திருக்கும் இந்தியா, உள்நாட்டு விஷயத்தில் தலையிட வேண்டாம் என்றும் தெரிவித்திருக்கிறது.

    Advertisement

    தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை நிராகரித்திருக்கும் இந்தியா, எங்களின் இறையாண்மை மிக்க முடிவுகளில் தலையிட எந்தவித சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை என்று கறாராக சொல்லிவிட்டது.

    Advertisement

    இந்தியாவின் நிலை

    உலக வங்கியால் உருவாக்கப்பட்ட இந்த நீதிமன்றம், சிந்து நதி நீர் ஒப்பந்த விதிகளுக்கு புறம்பாக, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது என்பதால், இதன் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்பதில் மத்திய வெளியுறவுத்துறை உறுதியாக இருக்கிறது. இந்த அமைப்பின் சட்டப்பூர்வ நிலையை நாம் ஒருபோதும் அங்கீகரித்தது கிடையாது என்பதால், இதன் நீதிமன்ற விசாரணைகளில் நாம் இதுவரை பங்கேற்கவில்லை.

    கடந்த ஆண்டு ஏப்.22 அன்று நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறுது. பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முழுமையாக நிறுத்தும் வரை இந்த நிறுத்தம் தொடரும் என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.. இப்படி இருக்கையில் இந்த நிலைப்பாட்டிற்கு எதிராக தீர்ப்பு கொடுத்திருப்பதை இந்தியா சுத்தமாக ரசிக்கவில்லை.

    Advertisement

    நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு

    பாகிஸ்தானின் முறையீட்டை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், "சிந்து நதி நீர் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக நடைமுறையில் உள்ளது. ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கு இந்தியா சொல்லும் காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை" என்று தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவின் ராட்லே நீர்மின் திட்டத்தின் அணை சுவர்களை கட்டுவதற்கு தற்காலிக தடையும் விதித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நடுநிலை நிபுணர் குழுவின் இறுதி முடிவு அடுத்த ஆண்டு ஜூலையில் வர இருப்பதால், அதுவரை குறிப்பிட்ட அளவுக்கு மேல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இருப்பினும் இந்த நீதிமன்றத்தின் தற்போதைய அல்லது எதிர்கால உத்தரவுகள் எதுவும் இந்தியா மேற்கொண்டு வரும் நீர்மின் திட்ட பணிகளில் எந்த தாக்கத்தையும் எற்படுத்தாது என்று மத்திய வெளியுறவுத்துறை தெளிவுப்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Topics: #india #pakistan

    English Summary

    India has ignored the International Court of Arbitration's verdict on the Indus water sharing issue and has also said that it should not interfere in the internal affairs.