டெல்லி: இந்தியா தனது 100வது சுதந்திர தினத்தை 2047ல் கொண்டாடுகிறது. அப்போது நாடு வல்லரசாக மாறியிருக்கும் என்று பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அதெற்கெல்லாம் சாத்தியம் இல்லை என்று சர்வதேச ஆய்வறிக்கை கூறியிருக்கிறது.
மோடியின் வார்த்தைகளில் சொல்வதெனில், இந்தியா 2047ல் விஷ்வ குருவாக மாறியிருக்கும். அதாவது உலக நாடுகளுக்கு நாம்தான் தலைமை தாங்குவோம். சீனா கூட நமக்கு பின்னாடிதான் இருக்கும் என்று சொன்னார்.
ஆனால் இதெல்லாம் சாத்தியம்தான், இருந்தாலும் 2047க்குள் சாத்தியம் கிடையாது. 2060ல் வேண்டுமானால் சாத்தியமாகலாம் என்று வேர்ல்டு இன்ஈக்வாலிட்டி லேப் (World Inequality Lab - WIL) ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது. இந்த WIL அமைப்பு, 'உலகளாவிய நீதி அறிக்கை: பூமியின் எல்லைகளுக்கு உட்பட்ட சமத்துவம் மற்றும் செழிப்புக்கான ஒரு திட்டம்' என்கிற பெயரில் ஓர் ஆய்வை மேற்கொண்டு வந்தது. இந்த ஆய்வின் ரிப்போர்ட் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பை விட, இந்தியாவின் பங்களிப்பு 2060-ம் ஆண்டிற்குள் அதிகரிக்கக் கூடும். அதுவும் கூட, 2050க்கு பிறகு சீனாவில் வளர்ச்சி மந்தமடையும். எனவே இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருப்பதை போல தெரியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. என்னதான் இப்போதைக்கு சீனா டாப்பில் இருந்தாலும், தற்போது அந்நாட்டின் மக்கள் தொகை குறைந்தது வருகிறது. இது 2050க்கு பிறகு வேகமெடுக்கும். புள்ளி விவரமாக சொல்ல வேண்டும் எனில், மக்கள் தொகை குறைந்தால் உற்பத்தியும் குறையும். இது அப்படியே செயின் ரியாக்ஷன் மாதிரி ஜிடிபியில் தாக்கத்தை ஏற்படுத்தி, அதை குறைக்கும். தற்போது உலக ஜிடிபி-யில் இந்தியாவின் பங்கு சுமார் 8%. 2100-ம் ஆண்டிற்குள் இது 16% ஆக அதிகரிக்கும் என்று ஆய்வு சொல்கிறது. அதேபோல தற்போது உலக அளவில் 20% பங்களிப்பை கொடுக்கும் சீனா, 2100ம் ஆண்டில் வெறும் 7% தான் கொடுக்கும். இந்த ஆய்வின்படி பார்த்தால், இனி சீனாவால் எப்போது இந்த உயர்தை எட்டவே முடியாது என்று உறுதியாக சொல்லலாம். இருந்தாலும் இந்த உயரத்தை இந்தியா எட்ட வேண்டும் எனில், பொருளாதார சமத்துவமின்மையை குறைக்க வேண்டும். கல்வி, சுகாதாரத்திற்கு மத்திய மாநில அரசுகள் அதிக அளவில் நிதியை ஒதுக்க வேண்டும். இதெல்லாம் நடந்தால்தான் இந்தியா வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.சீனாவை எப்போது முந்துவோம்?
சீனாவின் வீழ்ச்சிக்கு காரணம்
இந்தியாவின் நிலைமை என்ன?
இந்தியா என்ன செய்யனும்?