இருமடங்கு வேகத்தில் வளரும் இந்திய பொருளாதாரம்.. சுதந்திர தின உரையில் ஜனாதிபதி சொன்ன முக்கிய விஷயம்

  • டெல்லி: ''நாடு என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சொந்தமானது. நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கு உண்டு. உலகம் முழுவதும் நிலவும் போர்கள் மற்றும் நிலையற்ற தன்மைக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதாரம் உலகளாவிய சராசரி வளர்ச்சியை விட இருமடங்கிற்கும் அதிகமான வேகத்தில் வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பாசிட்டிவான விஷயமாகும்.'' என்று நாட்டு மக்களுக்கான சுதந்திர தின உரையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு கூறினார்.

    Advertisement

    நாளை நம் நாட்டின் 80வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தினவிழாவையொட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    Advertisement

    ''இன்னும் சில மணிநேரங்களில் நமது நாட்டு சுதந்திரத்தின் 80வதுஆண்டு மங்களகரமாக தொடங்க உள்ளது. நாட்டில் வசிக்கும் இந்தியர்கள்,வெளிநாட்டில் வசிப்பவர்கள் எனஅனைவரும் இந்த விழாவை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். நம் நாட்டின் தேசியக்கொடியை அளவற்ற பெருமையுடன் ஏற்றுகிறோம்.

    1947 ஆகஸ்ட் 15ம் தேதி அன்னை இந்தியா அடிமைத்தனத்தின் பிடியில் இருந்து விடுபட்டது. இந்த நாளில் அனைவரின் தியாகத்தையும் நினைவு கூறி போற்ற வேண்டும். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். உலகளவில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. உலகளவில் நடக்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் மட்டுமே நடைபெறுகிறது. நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் தான் நம்முடைய பெரிய பலம் 59 கோடி மககளுக்கு 'ஜன் தன் யோஜனா' வங்கி கணக்கு வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர்களும் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். பயங்கரவாதத்திற்கு எப்போதும் தகுந்த பதிலடி நிச்சயம் அளிக்கப்படும். உலகம் முழுவதும் நிலவும் போர்கள் மற்றும் நிலையற்ற தன்மைக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதாரம் உலகளாவிய சராசரி வளர்ச்சியை விட இருமடங்கிற்கும் அதிகமான வேகத்தில் வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பாசிட்டிவான விஷயமாகும்.

    'கேலோ இந்தியா' (Khelo India) போன்ற முன்னெடுப்புகள் நாடு முழுவதும் விளையாட்டு துறையை நோக்கி ஆர்வத்தை அதிகரிக்க உதவும். இதுபோன்ற முயற்சிகள் நேர்மறையான பலன்களை அளித்து வருகிறது. மாணவர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரின் ஆதரவும் தேவை. பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கவும், தேர்வு நடைமுறையை வெளிப்படையானதாகவும், பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் மாற்றுவதையும் நோக்கமாக கொண்டு தேர்வு முறையை சீரமைக்க அரசு விரிவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சொந்தமானது. நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கு உண்டு'' என்றார்.

    English Summary

    President Droupadi Murmu address to Nation: "The nation belongs to the entire society. Every citizen has a role in the country's progress and development. Despite the wars and instability prevailing across the globe, India's economy is projected to grow at more than double the pace of the global average. This is a positive’’ .