கசங்காது.. கிழியாது! புழக்கத்துக்கு வரும் பாலிமர் ரூபாய் நோட்டுகள்! பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாதா?

  • டெல்லி: இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக விரைவில் பிளாஸ்டிக் அல்லது பாலிமர் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில், முதலில் மத்திய அரசு அதனை மறுத்தது. பின்னர் ஆய்வில் உள்ளதாக கூறியது. இந்நிலையில், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

    Advertisement

    இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் காசுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடுகிறது. பல நாடுகளில் பிளாஸ்டிக் மற்றும் பாலிமரில் ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்படும் நிலையில் இந்தியாவில் உயர்தர காகிதம், பருத்தி மற்றும் லினன் கலவையால் தயாரிக்கப்படுகின்றன.

    Advertisement

    இதனால் இந்த ரூபாய் நோட்டுகள் நீண்ட நாட்கள் புழக்கத்தில் இருந்தாலும், அடிக்கடி கிழிவது, கசங்குவது, அழுக்காவது போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறது. இதனால் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்று புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கிறது ரிசர்வ் வங்கி.

    பாலிமர் ரூபாய் நோட்டுகள்

    இதற்காக மட்டும் ஆண்டு கணக்கில் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதனால் இந்தியாவில் பாலிமர் அல்லது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. பாலிமர் நோட்டுகள் என்பது காகிதம் அல்லது பருத்திக்கு பதிலாக பாலிப்ரொப்லின் என்ற சிறப்பு வகை பிளாஸ்டிக் பொருளால் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    பிளாஸ்டிக் ரூபாய்

    இந்த வகை ரூபாய் நோட்டுகளை ஏற்கனவே ஆஸ்திரேலியா, கனடா ,நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ள நாடுகள் புழக்கத்தில் விட்டுள்ளன. இந்த பாலிமர் அல்லது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் சாதாரண காகித நோட்டுகளை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிக ஆயுள் கொண்டவையாகவும், தண்ணீர் மற்றும் அழுக்கால் பாதிக்கப்படாதவையாக இருக்கும். மேலும் பாலிமர் ரூபாய் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க முடியும் என்பதால் கள்ள நோட்டுகளை தயாரிப்பது எதிர்காலத்தில் குறையும்.

    ரூபாய் நோட்டு

    பெரும்பாலான நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் பாலிமர் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், கடந்த ஜூன் 30-ம் தேதி முதல் புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக உள்ளதாகவும். தற்போதைய நோட்டுகள் விரைவில் செல்லாமல் போகும் என்றும் சமூக வலைதளங்களில் பரவியது.

    Advertisement

    நிர்மலா சீதாராமன்

    இதற்கிடையே இந்த தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என மத்திய அரசின் பத்திரிகை மற்றும் தகவல் அலுவலகம் தெளிவுபடுத்தியது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியும் தற்போதைக்கு அதுபோன்ற எந்த திட்டமும் இல்லை என சொல்லி இருந்தது. இந்த நிலையில் தான் இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

    இந்திய ரிசர்வ் வங்கி

    இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக பதில் அளித்த அவர்," இந்திய ரிசர்வ் வங்கி தனது மத்திய வாரியத்தின் பரிந்துரையின் பேரில் 1983 இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 25 பிரிவின்படி கள சோதனைகளுக்காக 100 கோடி ரூபாய் மதிப்பிலான பத்து மற்றும் இருபது ரூபாய் பாலிமர் நோட்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளது. கள சோதனைகள் வெற்றிகரமாக முடிந்த பிறகு இந்த இரண்டு மதிப்புகளிலும் பாலிமர் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என அரசுக்கு முன்மொழிவை அனுப்பி உள்ளது.

    Advertisement

    பழைய ரூபாய் நோட்டுகள்

    அதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இந்த ரூபாய் நோட்டுகள் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளுடன் பயன்பாட்டில் இருக்கும். இதற்கான மூலப்பொருள் கொள்முதல் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. எனவே இப்போதைக்கு பாலிமர் ரூபாய் நோட்டுகள் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் வரும் காலங்களில் 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்திற்கு விடப்படலாம் என்கின்றனர்.

    English Summary

    RBI plans field trials of ₹10 and ₹20 polymer notes, while existing paper currency will continue to remain valid.