சீனாவுக்கு புதிய சிக்கல்! டாங்கிகளில் இந்திய ராணுவம் செய்யும் பெரிய அப்டேட்! பாகிஸ்தானும் ஷாக்!

  • டெல்லி: உக்ரைன்-ரஷ்யா போரில் ஏகப்பட்ட டாங்கிகள் அழிக்கப்பட்டன. இதை பார்க்கும்போது, டாங்கிகளின் காலம் முடிந்துவிட்டது என்று பலரும் கூறுகின்றனர். இப்படி பேசப்பட்டு வரும் நேரத்தில்தான் இந்திய ராணுவம், டாங்கிகளில் புதிய மாற்றத்தை செய்து வருகிறது. இது சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சிக்கலாக மாறும் என்று பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    ரஷ்ய-உக்ரைன் போரை பார்க்கும்போது டாங்கிகள் குறித்து எல்லோருக்கும் நெகட்டிவான எண்ணம்தான் வரும். ஆனால், உண்மை என்னவெனில், டாங்கிகளுக்கு மாற்றாக பலமான தடுப்பு ஆயுதம் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான்.

    Advertisement

    எனவே இருக்கும் டாங்கிகளை இன்னும் சிறப்பாக மேம்படுத்தும் வேலையில் இந்தியா இறங்கியிருக்கிறது. இந்திய ராணுவத்தின் T-90 பீஷ்மா போர் டாங்கிகள் இப்போது தங்களது முக்கிய என்ஜினை அணைத்துவிட்டு, எதிரிகளுக்கு தெரியாமல் மறைந்திருந்து வேட்டையாடும் அதிநவீன திறனை பெற்றுள்ளன. பொதுவாக போர் டாங்கிகளில் உள்ள ரேடார்கள், கணினிகள், இலக்கை குறிவைக்கும் அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் இயங்குவதற்கு டாங்கியின் மெயின் என்ஜின் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

    இதனால் அதிகப்டியான எரிபொருள் வீணாவதோடு, என்ஜின் சத்தம் மற்றும் அதிலிருந்து வெளியாகும் வெப்பம் காரணமாக எதிரிகளின் ரேடாரில் டாங்கிகள் எளிதாக சிக்கிக்கொள்ளும் ஆபத்து இருந்தது. ஆனால், தற்போது இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ரூ.586 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் மூலம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 10-12 kW துணைக்கட்டுப்பாட்டு மின் உற்பத்தி அலகுகளை T-72 மற்றும் T-90 டாங்கிகளில் பொருத்த நடவடிக்கை எடுத்திருக்கிறது.

    Advertisement

    இந்தியாவின் முக்கிய எதிரி நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகள் பெரும்பாலும் உயரமான மலைப்பகுதிகளிலும், லடாக் போன்ற கடுமையான குளிரான உயரமான இடங்களிலும் அமைந்திருக்கிறது. இந்த இடங்களில் டாங்கிகள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிலையாக நின்று எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி வரும். அப்போது மெயின் என்ஜின் ஆனில் இருந்தால்.. தெர்மல் ஸ்கேனரை வைத்து ஈஸியாக டாங்கரை கண்டுபிடித்துவிடலாம். இப்படியான ஆபத்தை தவிர்க்க இந்த அப்கிரேடு பயன்படும்.

    புதிய சாதனங்களை பொருத்துவதன் மூலம், டாங்கின் பிரதான என்ஜினை முழுமையாக அணைத்துவிடலாம். என்ஜின் அணைக்கப்பட்ட நிலையிலும், டாங்கியின் உள்ளே இருக்கும் ஆயுத கட்டுப்பாட்டு அமைப்புகள் தகவல் தொடர்பு மற்றும் இரவு நேர கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் தடையின்றி இயங்கும்.

    Advertisement

    என்ஜின் அணைக்கப்பட்டால் அதிலிருந்து சத்தம் வராது. மட்டுமல்லாது டாங்கிகள் வெப்பமடையாது. இதனால் தெர்மல் ஸ்கேனரை வைத்து பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. பிரதான என்ஜின் தேவையில்லாமல் அணைக்கப்படுவது தடுக்கப்படுவதால், பெருமளவு டீசல் சேமிக்கப்படும். மேலும் டாங்கிகளின் ஆயுட்காலம் அதிகமாகும்.

    பல கோடி மதிப்புள்ள ஒரு டாங்கியை, வெறும் ரூ.1-2 லட்சம் மதிப்பிலான ட்ரோன்கள் தாக்கி அழித்துவிடும் என்பது உண்மைதான். ஆனால், டாங்கிகள் மாதிரி ஒரு பலமான தடுப்பு ஆயுதத்தை இந்த உலகம் கண்டுபிடிக்கவில்லை. டாங்கி யூனிட்டை விமானப்படையுடன் இணைப்பது, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தும் ஆக்டிவ் புரோடெக்ஷன் சிஸ்டம்ஸ் மற்றும் ட்ரோன் ஜாமர்களை பொறுத்துவதன் மூலம் டாங்கிகளை பாதுக்காக்க முடியும். அந்த வகையில் இந்திய ராணுவம் தனது வலிமையை தற்போது அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்சென்றிருக்கிறது.

    English Summary

    Indian Army: Many tanks were destroyed in the Ukraine-Russia war. Seeing this, many say that the era of tanks is over. At the same time as this is being talked about, the Indian Army is making a new change in tanks. This could become a problem for China and Pakistan, say defense experts.