முழு வலிமை பெறும் இந்திய கடற்படை.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

  • டெல்லி: இந்திய கடற்படையின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் 8 அடுத்த தலைமுறை போர்க்கப்பல்களை உருவாக்கும் திட்டத்திற்கு பிரதமரின் தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரின் அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

    Advertisement

    இந்த மெகா பாதுகாப்பு திட்டம், இந்திய பெருங்கடல் பகுதியில்.. இந்தியாவின் கடல்சார் ஆதிக்கத்தை நிலைநாட்ட பெரிதும் உதவும் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    எதிரிகளின் ரேடாரர்களில் எளிதில் சிக்காத, அதிநவீன ஸ்டெல்த் தொழில்நுட்பத்துடன்.. முற்றிலும் இந்திய கடற்படையின் சொந்த வடிவமைப்பில் இவை உருவாக்கப்பட உள்ளன. இந்த ஒவ்வொரு அதிவேக போர்க்கப்பலும், சுமார் 2,000 டன் எடையும் 30 நாட்டிக்கல் மைல் வேகத்திலும் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். அதாவது 55 கிலோமீட்டர் வேகத்தில் என்ன கப்பல் நகரும்.

    போர்க்கப்பல்களை பொறுத்தவரை, இந்த வேகம் என்பது அசாத்தியமானதாகும். சாதாரண சரக்கு கப்பல்கள்.. அதிகபட்சமாக 30 லிருந்து 40 கிலோமீட்டர் வேகத்தில் தான் செல்லும். அத்துடன் இந்த வேகத்தை ஒப்பிடும்போது, இந்தியா உருவாக்க உள்ள போர்க்கப்பல்கள் அதிக வேகத்தை கொண்டிருக்கின்றன.

    Advertisement

    இந்த கப்பல்கள் கண்காணிப்பு பணிகள், பாதுகாப்பு, எஸ்கார்ட், கடலோர பாதுகாப்பு மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் எதிர்ப்பு போர்கள் போன்ற பலதரப்பட்ட கடல் சார்ந்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

    ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவில், முன்னணி பொதுத்துறை நிறுவனங்களான கொல்கத்தாவின் ஜிஆர்எஸ்இ மற்றும் கோவா ஷிப்யார்டு டெலிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த கப்பல்களை கட்டமைக்க உள்ளன.

    அரசு ஊழியர்களை ஆயாவாக மாற்றிய தவெக எம்எல்ஏ பல்லவி.. குழந்தையை பார்த்துக்க ஆள் இல்லையா?

    இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்கள், அடுத்த சில நாட்களில் கையெழுத்தாக உள்ளன. இந்த தொடரில் முதல் அதிநவீன போர்க்கப்பல், 2030-ம் ஆண்டுக்குள் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தற்போது கடற்படையில் 20 முதல் 30 ஆண்டுகள் பழமையான வீர், குக்கி மற்றும் கோரா ரக போர்க்கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுக்கு பதிலாக அதிக திறன் கொண்ட, இந்த புதிய தலைமுறை கப்பல்கள் மாற்றப்பட உள்ளன. பக்கத்து நாடான பாகிஸ்தான், துருக்கியிடமிருந்து 4 பாபூர்-கிளாஸ் அதி நவீன போர்க்கப்பல்களை பெற்றுள்ளன. எனவே இந்திய பெருங்கடல் பகுதியில்.. தனது பலத்தை நிலை நிறுத்த, இந்தியாவுக்கு இந்த புதிய போர்க்கப்பல்கள் அவசியமாக இருக்கிறது.

    இந்த உள்நாட்டு தயாரிப்பு திட்டம், நாட்டில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி உறுதி செய்யும் என்று சொல்லப்படுகிறது.

    Topics: #india #navy #ship

    English Summary

    Indian Navy: With the aim of strengthening the security of the Indian Navy, the Cabinet Committee on Security, chaired by the Prime Minister, has approved a project to build 8 next-generation warships at a cost of Rs 40,000 crore.