ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா

  • டெல்லி: உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் வைத்திருந்த பிறகும், ரயிலில் சீட் கிடைக்காமல் நின்று கொண்டு பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான பயணிகளுக்கு ரயில்வேக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நான்கு பயணிகளுக்கும் தலா ₹20,000 இழப்பீடு வழங்க போஜ்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    இந்தியாவில் ரயில்கள் தான் மிக முக்கியமான பொதுப் போக்குவரத்தாக இருக்கிறது. இருப்பினும், அதில் பயணிக்கும்போது, நம்மில் பலருக்கும் சுமுகமான பயணம் கிடைக்காது. குறிப்பாகச் சில நேரங்களில் நாம் கஷ்டப்பட்டு புக் செய்த டிக்கெட்டில் வேறு யாராவது ஆக்கிரமித்து இருப்பார்கள். அதுபோல நடந்த ஒரு சம்பவத்திற்குத் தான் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    உத்தரவு

    அதாவது, விந்தியாதல் முதல் ஆரா வரை எல்டிடி பட்னா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 13202) ரயிலில் பயணம் செய்த நான்கு பயணிகளுக்கு இந்த நிலை ஏற்பட்டது. ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக வந்துள்ளது. ஒரு வழியாக ரயில் வந்த பிறகு ஏறி தங்கள் இருக்கைக்குச் சென்றபோது அவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவர்களின் கன்பார்ம் செய்யப்பட்ட படுக்கையில் வேறு சிலர் ஆக்கிரமித்து இருந்துள்ளனர். கேட்டதற்கு ரயில்வே ஊழியர்கள் எனச் சொல்லியுள்ளனர்.

    இது தொடர்பாக அங்கிருந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலன் இல்லை. ரயில்வே சேவா மூலம் புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பயணம் முழுவதும் நின்று கொண்டே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.. கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட் இருந்த பிறகும் தங்களுக்கு உரிய சீட் வழங்கப்படாததைக் கண்டித்து அவர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    Advertisement

    நுகர்வோர் குறைதீர் ஆணையம்

    இந்த வழக்கை விசாரித்தபோது தான் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் இருந்த போதிலும், ரயில்வே படுக்கை இடங்களை வழங்கத் தவறியதால், பயணிகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் துன்பத்திற்கு ஆளானதாகக் குறைதீர் ஆணையம் தெரிவித்தது. இது ரயில்வேயின் சேவைக் குறைபாடு என ஆணையம் குறிப்பிட்டது.

    ஆணையம் மேலும் தனது உத்தரவில், "புகார்தாரர் பல வழிகளில் ரயில்வேயை அணுக முயன்றார்.. ஆனால் மனுதாரருக்கும் சரி, மற்ற மூவருக்கும் சரி குறிப்பிட்ட ரயிலில் தங்கள் இடங்களைப் பெறவில்லை... மனுதாரர் மூன்று நண்பர்களுடன் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் துன்பத்திற்கு ஆளானார். வட மத்திய ரயில்வே மற்றும் ரயில்வே வாரியத்தின் சேவை குறைபாட்டையே இது காட்டுகிறது" என்றார்.

    Advertisement

    மறுப்பு

    இருப்பினும், சேவை குறைபாடு என்பதை வட மத்திய ரயில்வே மற்றும் ரயில்வே வாரியம் தரப்பை மறுத்தன. இது சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினை என்றும், தமது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும் தெரிவித்தனர். மேலும், சேவையில் குறைபாடு இல்லை என்றும் வாதிட்டனர். எனினும், ஆவணங்களை ஆய்வு செய்த ஆணையம், சேவைக் குறைபாடு இருப்பதை உறுதி செய்ததுடன், பயணிகள் துன்பத்திற்கு ஆளானதையும் கண்டறிந்து, ரயில்வேயின் வாதத்தை நிராகரித்தது.

    உத்தரவு

    எனவே, முன்பதிவு செய்யப்பட்ட ₹1,876.80 தொகையை 8 சதவீத ஆண்டு வட்டியுடன் திரும்பச் செலுத்துமாறும் உத்தரவிட்டது. மேலும், ₹20,000 இழப்பீட்டையும், வழக்குச் செலவுகளுக்காக ₹15,000யும் வட மத்திய ரயில்வே மற்றும் ரயில்வே வாரியம் 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் செலுத்தப்படாவிட்டால், புகார்தாரர் அதை 10 சதவீத ஆண்டு வட்டியுடன் வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    நீங்களும் பெறலாம்

    உங்களுக்கும் இதுபோல ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்தும் சீட் கிடைக்கவில்லை என்றால் நீங்களும் இழப்பீடு பெறலாம். இதுபோல சம்பவம் நடந்து நீங்கள் ரயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயன்றும், உங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் வழக்கு தொடரலாம். நிலைமை ஆராய்ந்து சரியான நிவாரணத்தை நுகர்வோர் மையம் அளிக்கும்.

    English Summary

    Consumer Disputes Redressal Commission ordered North Central Railway to pay Rs 20,000 compensation to four passengers who were forced to stand(இந்தியன் ரயில்வேயில் ஏற்பட்ட பிழைகள்): Indian railway latest news in tamil.