சீனாவையே மிரட்டும் டெக்னாலஜி! புதிய சாதனை படைத்த இந்திய ராணுவம்! பாகிஸ்தான் இனி உஷாராதான் இருக்கனும்

  • டெல்லி: பாதுகாப்புத்துறையில் இந்தியா தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில், தற்போது தற்கொலை ட்ரோன் உற்பத்தியில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

    உத்தரப் பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்த Kawa UAV என்ற இந்திய பாதுகாப்புத்துறை ஸ்டார்ட்-அப் நிறுவனம், 'திவ்யாஸ்த்ரா மார்க் 3' என்ற லோயிட்டரிங் முனிஷன் வகை ட்ரோனை வெற்றிகரமாக சோதித்துள்ளது.

    லோயிட்டரிங் முனிஷன் என்பது தற்கொலை ட்ரோன்களாகும். இந்த வகை ட்ரோன்கள் வானத்தில் வட்டமடித்து இலக்கை கண்காணித்து தாக்கும் திறன் கொண்டவை. இதில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்கள் மற்றும் சென்சார்கள் மூம் தரைக்கட்டடுப்பாட்டு மையத்திற்கு லைவ் வீடியோவை அனுப்பும். இதில் சில வகை ட்ரோன்கள் தானாகவே எதிரிகளின் டாங்கிகள், ரேடார்களை தாக்கி அழிக்கும்.

    உள்நாட்டில் இதற்கு முன்பு தற்கொலை ட்ரோன்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் கூட.. 100% உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜெட் என்ஜின்களை கொண்ட ட்ரோன்கள் உருவாக்கப்பட்டதில்லை. அந்த வகையில், திவ்யாஸ்த்ரா மார்க் 3 முதல் ட்ரோன். இதில் பயன்படுத்தப்பட்ட ஜெட் என்ஜின் DG Propulsion நிறுவனத்தால் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. வெளிநாட்டு பாகங்களோ அல்லது.. இறக்குமதி செய்யப்பட்ட என்ஜின்களோ இதில் பயன்படுத்தப்படவில்லை.

    மட்டுமல்லாது இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஒரு வருடம்தான் ஆகிறது. அதற்குள் இதன் டிசைன் முடிக்கப்பட்டு வெற்றிகரமாக பறக்கவிட்டு சோதிக்கப்பட்டுள்ளது. ஜெட் என்ஜின் பொருத்தப்பட்டிருப்பதால் இது வழக்கமான ட்ரோன்களை விட அதிவேகமாகவும், துல்லியமாகவம் சென்று தாக்கும் திறன் கொண்டது. எனவே பாகிஸ்தான் இனி தனது வான் வழி பாதுகாப்பை பல கட்டங்களுக்கு மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் தற்கொலை ட்ரோன் தயாரிப்பில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியிருப்பதால்.. இந்தியா மீதான கண்காணிப்பையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    Topics: #india #jet #drone

    English Summary

    Indigenous Jet-Powered Loitering Munition: India continues to achieve new milestones in the defense sector. In this regard, the country has now reached a new peak in the production of suicide drones.