டெல்லி: இந்தியாவின் அணு ஆயுத பலம் மற்றும் அணு உலை மேம்பாடுகள் குறித்து அமெரிக்காவின் முன்னணி கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான 'அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு' வெளியிட்டிருக்கும் புதிய ஆய்வு அறிக்கை சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
'இந்தியாஸ் நியூக்ளியர் வெப்பன்ஸ்-2026' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த அறிக்கை யாருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதோ இல்லையோ.. பாகிஸ்தானுக்கு கலக்கத்தை கொடுத்திருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் வசம் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த 160 அணு ஆயுதங்களுடன் புதிய ஏவுகணைகளுக்காக மேலும் 30 அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு, தற்போது மொத்த எண்ணிக்கை 190ஆக அதிகரித்திருப்பதாக இந்த அமைப்பு கூறுகிறது. நம்மிடம் தற்போது 140-225 அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு தேவையான அளவிலான சுமார் 730 கிலோ ராணுவ தர புளூட்டோனியம் இருப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அணு ஆயுதங்களை ஏவக்கூடிய 9 வெவ்வேறு அதிநவீன அமைப்புகளை.. அதாவது 2 வகையான போர் விமானங்கள், 6 வகையான நிலப்பரப்பு ஏவுகணைகள் மற்றும் 1 கடல்சார் ஏவுகணைகளை நாம் இருப்பு வைத்திருக்கிறோம். சென்னைக்கு அருகில் உள்ள கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில், 10 ஆண்டுகளுக்கு பிறகு 500 மெகாவாட் முன்மாதிரி அதிவேக பெருக்கு அணு உலை கடந்த ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்த அணு உலை 80% திறனுடன் இயங்கினால், ஆண்டுக்கு 140 கிலோ புளூட்டோனியம் 239ஐ உற்பத்தி செய்ய முடியும். இது ஆண்டுக்கு 35 புதிய அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு சமமாகும். எனவே அடுத்தடுத்த ஆண்டுகளில் நம்முடைய அணு ஆயுதங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். தற்போது கல்பாக்கத்தில் இதே போன்ற மேலும் 2 புதிய அதிவேக பெருக்கு அணு உலைகளை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. என்னதான் இந்தியா அணு ஆயுதங்களின் பலத்தை அதிகரித்தாலும், தனது ஆயுத கொள்கையில் உறுதியாக இருக்கிறது. முதலில் நாம் தாக்க கூடாது என்பதுதான் இந்த நிலைப்பாடாகும். தற்போது பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.அணு ஆயுதங்களின் எண்ணிக்கை