டெல்லி: சவுதி அரேபியாவின் விமான நிலையங்களை குறிவைத்து ஏமன் ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் சவுதி அரேபியாவிற்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இண்டிகோ நிறுவனம் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக ரியாத் சர்வதேச விமான நிலையம், தம்மம் கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பயணிகள் பலியாகி உள்ளனர். அதேபோல் 300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா செல்லும் 'இண்டிகோ' விமானங்களின் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. தற்போது இந்த விமான சேவைகள் ரத்து தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 'இண்டிகோ' விமான நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''பயணத்துக்கான அறிவுரைகள். அதிகாரித்து வரும் பாதுகாப்பு காரணங்கள் காரணமாக சவுதி அரேபியா தலைநகர் ரியாத்திற்கான விமான சேவைகள் அக்டோபர் 31ம் தேதி வரையும், சவுதி அரேபியாவின் பிற நகரங்களாக .ள்ள ஜெட்டா, தம்மம், மதினா உள்ளிட்ட நகரங்களுக்கான விமான சேவைகள் அக்டோபர் 27 ம் தேதி வரையும் நிறுத்தப்பட உள்ளது'' என கூறப்பட்டுள்ளது. முன்னதாக 'ஆகாசா ஏர்' என்ற விமான நிறுவனம் சார்பில் சவுதி அரேபியாவிற்கான விமான போக்குவரத்தை அக்டோபர் 27 ம் தேதி வரை நிறுத்துவதாக அறிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இண்டிகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இண்டிகோவின் இந்த அறிவிப்பின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. நேற்று முன்தினம் தம்மம் நகரில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்தில் ஹவுதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின்போது ஒரு இந்தியர் உள்பட 2 பேர் பலியானதோடு, 2 இந்தியர்கள் காயமடைந்தனர். அதோடு விமான நிலையமும் சேதமடைந்தது. இன்னும் சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தொடர்ந்து தாக்கதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் இண்டிகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.