நடுவானில் விமானத்தில் பற்றி எரிந்த தீ.. கதறிய பயணிகள்.. பயணிகளுக்கு தெரிய வேண்டிய பவர்பேங் விதிகள்

  • சென்னை: டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் திடீரென பவர் பேங்க் வெடித்ததில் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடுவானில் விமானத்தில் பற்றிய இந்த தீயால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சில நொடிகளில் தீ அணைக்கப்பட்ட நிலையில், விமானம் அவசரமாக ஹைதராபாத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பவர்பேங்க் கொண்டு செல்வது ஏன் ஆபத்தானது.. இது தொடர்பான விதிகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

    Advertisement

    பொதுவாகவே விமான போக்குவரத்து என்பது மிகவும் பாதுகாப்பான ஒன்று! பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதால் மிக அரிதாகவே விபத்துகள் நடக்கும். இருப்பினும், கட்டுப்பாடுகளை தாண்டி சில நேரங்களில் மோசமான சம்பவங்கள் நடந்துவிடும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

    Advertisement

    இண்டிகோ சம்பவம்

    டெல்லியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானத்தில் வந்து கொண்டு இருந்தது. இண்டிகோ நிறுவனத்தின் 6E6115 விமானம் இன்று அக்டோபர் 11ஆம் தேதி டெல்லியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. ஏர்பஸ் A321neo ரகத்தை சேர்ந்த VT-NOE விமானம், பிற்பகல் 1.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டது. விமானம் கிளம்பிய போது எல்லாமே நார்மலாகவே இருந்துள்ளது. இந்த விமானம் மாலை 4 மணிக்கு சென்னையில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.

    இருப்பினும், நடுவானில், விமானத்தில் பயணித்த ஒருவரின் பவர் பேங்க் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. பயணிகள் சீட்டிற்கு மேலே இருக்கும் லக்கேஜ் இடத்தில் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர். சில பயணிகள் தீ பரவாமல் இருக்க அருகே இருக்கும் லக்கேஜ்களை எடுத்தனர். அப்போது துரிதமாக செயல்பட்ட விமானத்தின் கேபின் பணியாளர்கள் தீயணைப்பு கருவியை பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இண்டிகோ சொல்வது என்ன

    விமானத்தில் ஏற்பட்ட இந்த திடீர் மற்றும் குழப்பத்தை தொடர்ந்து, விமானிகள் பாதுகாப்பு நடைமுறைகளின்படி விமானத்தை ஹைதராபாத்தில் தரையிறங்க முடிவு செய்தனர். இதையடுத்து, ஷம்ஷாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

    விமானத்தில் இதுபோல ஒரு சம்பவம் நடந்ததை உறுதி செய்துள்ள இண்டிகோ, பயணிகளை சென்னைக்கு அழைத்து செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எதிர்பாராத இந்த சூழலால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு பவர் பேங்க் தான் காரணம் என சொல்லப்படுகிறது. விமானத்தில் பவர்பேங்க் கொண்டு செல்வது ஏன் ஆபத்தானது.. இது தொடர்பான விதிகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

    Advertisement

    இந்தியாவில் பவர் பேங்க் எடுத்து செல்ல விதிகள்

    இந்தியாவில் விமான பயணத்தின்போது பவர் பேங்க்களைச் செக் இன் லக்கேஜ்ஜில் வைக்க அனுமதி இல்லை. அவற்றை பயணிகள் தங்களுடன் எடுத்து செல்லும் ஹேண்ட் லக்கேஜில் மட்டுமே வைத்திருக்க வேண்டும். பவர்பேங்குகளில் உள்ள லித்தியம் பேட்டரிகள் சில சமயம் தீ விபத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்பதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    ஹேண்ட் லக்கேஜ்ஜிலும் கூட அதிகபட்சம் 2 பவர் பேங்குகளை மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். ஒவ்வொன்றும் 100 Wh குறைவான திறன் கொண்டதாக இருக்க வேண்டும். செக்யூரிட்டி செக் சமயத்தில் அதிகாரிகள் பவர்பேங்கை சோதிப்பார்கள். அதில் எந்தவொரு டெமேஜும் இல்லை என்றால் மட்டுமே பவர்பேங்க்கை எடுத்து செல்ல அனுமதிப்பார்கள்.

    Advertisement

    கூடாது

    விமானத்தில் செல்லும்போது பவர்பேங் மூலம் சார்ஜ் செய்ய அனுமதி இல்லை.. விமான பயணத்தின்போது பவர் பேங்குகளை பயன்படுத்தி சார்ஜ் செய்வது கண்டிப்பாக தடை செய்துள்ளது. முடிந்தவரை பவர் பேங்குகளை இருக்கைக்கு மேலே உள்ள லக்கேஜ் பெட்டிகளில் வைக்க வேண்டும். மூடிய பெட்டிக்குள் ஏற்படும் தீ விபத்தை கண்டறிவது கடினம். அவை எப்போதும் கண்ணுக்கு தெரியும் வகையில் வைத்திருங்கள். அப்போது தான் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க முடியும்.

    English Summary

    IndiGo flight from Delhi to Chennai was diverted to Hyderabad after a passenger’s power bank reportedly caught fire mid-air(இண்டிகோ பவர்பேங்க் விதிகள்): IndiGo Flight Fire latest news in tamil.