‘இந்திரா காந்தி’ பெயரே இருக்கக்கூடாது.. பென்ஷன் திட்டங்களில் தூக்கியெறிந்த மோடி! கேபினட் ஒப்புதல்

  • டெல்லி: மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு பென்ஷன் திட்டங்களுக்கு சூட்டப்பட்டு இருந்த மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதில் பிரதமர் என்ற பெயரில் பெயர் வைக்க நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. குறிப்பாக மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பெயரில் வழங்கப்படும் திட்டங்களின் பெயர்களை மாற்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதன்படி மொத்தம் 5 திட்டங்களின் பெயர்களை மாற்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் அதன் கீழ் வரும் பிற பென்ஷன் திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. எந்தெந்த திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது? என்பது பற்றி இங்குபார்க்கலாம்.

    * மத்திய அரசு சார்பில் கடந்த 1995 ஆகஸ்ட் 15ம் தேதி மத்திய சமூக பாதுகாப்பு திட்டம் (NSAP or National Social Assistance Programme) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி சமாஜிக் சகாயதா யோஜனா (Pradhan Mantri Samajik Sahayata Yojana) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு 2026-27 ம் ஆண்டு முதல் 2030-31ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் ரூ.53,428 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    * வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் முதியவர்களுக்கு பென்ஷன் வழங்கும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி விரிதவஸ்த்தா பென்ஷன் யோஜனா என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * பிபிஎல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் கணவனை இழந்த பெண்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் திட்டமான இந்திரா காந்தி தேசிய கைம்பெண்கள் பென்ஷன் திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி விதவா பென்ஷன் யோஜனா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * பிபிஎல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான பென்ஷன் வழங்கும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் பென்ஷன் திட்டம் என்பது பிரதான் மந்திரி திவ்யன்ஜன் யோஜனா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    * குடும்பத்திற்கு பிரதானமாக வருமானம் ஈட்டும் நபர் இறந்துவிட்டால் அவருக்கு உதவித்தொகை வழங்கும் தேசிய குடும்ப நல திட்டத்தின் (National Family Benefit Scheme or NFBS) பெயர் பிரதான் மந்திரி பரிவாரலாப் யோஜனா என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    English Summary

    The Union Cabinet, led by Narendra Modi, has approved a proposal to remove the name of the late former Prime Minister Indira Gandhi from various pension schemes administered by the Central Government and rename them simply as "Prime Minister's [Scheme]."