ஒரு காலத்துல எப்படி இருந்த கம்பெனி சார்.. ஐபோன்களை வாங்க ஆளே இல்லை.. உற்பத்தியை குறைத்த ஆப்பிள்!

  • டெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதன் விற்பனை குறைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆப்பிள் நிறுவனம் உதிரி பாகங்களுக்கான ஆர்டர்களை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுக்கான உதிரிப்பாக உற்பத்தியை குறைக்குமாறு விநியோக நிறுவனங்களிடம் ஆப்பிள் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    உலகின் மிக பெரிய டெக் நிறுவனங்களில் முதன்மையானது ஆப்பிள் நிறுவனம். கடந்த பல ஆண்டுகளாகவே ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தாண்டும் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியானது.

    Advertisement

    ஆப்பிள் ஐபோன்

    இருப்பினும், அதன் விலை வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. இதனால் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லையாம். இதனால் ஆப்பிள் 18 சீரியஸ் மாடல்களின் உதிரி பாகங்களின் உற்பத்தியை ஆப்பிள் குறைத்துள்ளது. இது குறித்த தகவல்களை நிக்கேய் ஏசியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    அதாவது அக்டோபர் மாதத்திற்கான உதிரிப்பாக ஆர்டர்கள் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட அளவைவிட 15 முதல் 20 சதவீதம் வரை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. ரேம் விலை உயர்வு மற்றும் புதிய ஐபோன்களின் விலை அதிகரிப்பு ஆகியவை காரணமாக விற்பனை மந்தமாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதை எதிரொலிக்கும் வகையிலேயே உதிரி பாகங்களின் ஆர்டர்களை ஆப்பிள் குறைத்துள்ளது.

    Advertisement

    அதிக விலை

    புதிய ப்ரோ மாடல்கள் முந்தைய தலைமுறை ஐபோன்களைவிட அதிக விலைக்கு விற்கப்பட்டன. இந்தியாவில் ஐபோன் 18 ப்ரோவின் தொடக்க விலை ரூ.1,64,900 ஆகவும், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸின் தொடக்க விலை ரூ.1,79,900 ஆகவும் உள்ளது. அமெரிக்காவிலும் கூட முந்தைய தலைமுறை மாடல்களுடன் ஒப்பிடும்போது, இந்த இரண்டு புதிய மாடல்களின் விலை தலா 100 டாலர் அதிகரித்துள்ளது.

    எப்போதும் புதிய மாடல்கள் விற்பனைக்கு வரும்போது முதல் சில மாதங்கள் விற்பனை அதிகரிக்கும். இருப்பினும், இந்த முறை எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை அதிகரிக்கவில்லை. ஐபோன் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்த நிலையில், அதன் காத்திருப்பு காலமும் வெகுவாக குறைந்துள்ளதாம். விற்பனை சரிந்துள்ளதே இதை உணர்த்துவதாக உள்ளது.

    Advertisement
    ஆப்பிள் ஸ்டாரை பார்த்தால் பயங்கர ஷாக்.. சந்தை கடை போல குவிந்த மக்கள்! ரேட்டை பார்த்தால் தலை சுத்துது

    காரணம்

    ஆப்பிள் மட்டுமின்றி, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலக்டிரானிக் பொருட்களை தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களுமே இந்த சிக்கலை எதிர்கொண்டுள்ளன. எல்லா நிறுவனங்களும் உற்பத்தி செலவு அதிகரிப்பால் அழுத்தத்தை எதிர்கொள்கின்றன. ஏஐ டேட்டா சென்டர்கள் உலகெங்கும் அமைந்து வரும் நிலையில், அதற்கு மெமரி சிப்கள் அதிகம் தேவைப்படுகிறது. ஏஐ டேட்டா சென்டர்களுக்காகன மெமரி சிப் விற்றால் அதிக லாபம் என்பதால் ஏகப்பட்ட ரேம் தயாரிப்பு நிறுவனங்கள் ஏஐ டேட்டா சென்டர்களுக்கு மட்டும் சப்ளை செய்ய ஆரம்பித்துவிட்டன.

    Advertisement
    ஆப்பிள் ஐபோன் 17 இலவசம்.. 1,000 பேருக்கு கொடுப்பதாக அறிவித்த தொழிலதிபர்! ஜாக்பாட்

    என்ன நடக்கும்?

    இதனால் செல்போன், லேப்டாப் போன்ற கருவிகளுக்கு ரேம் சப்ளை செய்வோரின் குறைந்துவிட்டது. இதுவே ரேம் விலை உயர்வுக்கு பிரதான காரணம். இந்தியாவில் ரூபாயின் மதிப்பு பலவீனமடைவதும் விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாக இருக்கிறது.. டாலரில் பெரியளவில் விலையேற்றம் இல்லை என்றாலும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவதால் விலை உயர்கிறது.

    ரேம் விலை உயர்வால் செல்போன் விலையும் உயரவே அதன் விற்பனை சரிந்துள்ளது. 2026ல் உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 16.7 சதவீதம் குறையலாம் என ஆய்வு நிறுவனமான ஐடிசி தெரிவித்துள்ளது. வரும் காலங்களிலும் இதே டிரெண்ட் தான் தொடரும் என தெரிகிறது. ஒரு காலத்தில் ஆப்பிள் புதிய செல்போன்களை அறிமுகப்படுத்தும் போது பல மாதங்களுக்கு அவை விற்று தீர்ந்துவிடும். பலரும் ஆர்வமாக ஐபோன்களை வாங்குவார்கள். ஆனால், இப்போது விலை ஏற்றத்தால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

    English Summary

    Apple has reportedly reduced component orders for the iPhone 18 Pro and iPhone 18 Pro Max by 15–20% amid weaker-than-expected sales(ஐபோன் 18 விற்பனை சரிவு): iPhone 18 Pro Sales latest news in tamil.