10 லட்சம் ரூபாய் ஆக உயர்த்தும் மத்திய அரசு.. 70 வயதை கடந்தவர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி

  • டெல்லி: நாட்டில் 70 வயதை கடந்த ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன்பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் ரூ.5 லட்சம் வரை உயர் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற முடிகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 43 கோடி பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.1.6 லட்சம் கோடி மதிப்பிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்து தனது 172-வது அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. அதில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

    Advertisement

    நாட்டின் 70 வயது மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்ச மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2024ம் ஆண்டு இந்த திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் பயன்பெறலாம் எனறு விரிவுப்படுத்தினார்.

    Advertisement

    இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், தனியார் மருத்துவக் காப்பீடு வைத்திருக்கும் மூத்த குடிமக்களும் பயன்பெறலாம். ஆனால், வேறு எதாவது அரசு மருத்துவக் காப்பீடு திட்டம் வைத்திருந்தால், எந்த திட்டம் வேண்டும் என்பதை அவர்கள் தேர்வு செய்து பயன்பெற வேண்டியது அவசியம் ஆகும். ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இருக்கும் குடும்பத்தில் 70 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இருந்தால், அவர்களுக்கென தனி ரூ.5 லட்ச மருத்துவக் காப்பீடு டாப் அப் வழங்கப்படுகிது ஆனால், இந்த டாப் அப்பில் வேறு குடும்ப உறுப்பினர்கள் யாரும் பயன்பெற இயலாது. இதில் அந்த முதியவர் மட்டுமே பயன்பெற முடியும்.

    Advertisement

    PMJAY, ஆயுஷ்மான் பாரத் ஆகிய செல்போன் செயலி மூலம் பதிவு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு பெற செய்துகொள்ளலாம். பதிவு செய்த மூத்த குடிமக்களுக்கு தனி மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, ஏராளமான தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.

    அதேபோல் ஏற்கனவே நோயுற்றவர்களும் இந்தத் திட்டத்தில் இணைந்த தினத்திலிருந்து ஏற்கனவே இருக்கும் நோய்க்கும் சிகிச்சைபெறலாம் என்ற வசதிகள் உள்ளது. இந்தியா முழுவதும் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள எந்த ஒரு மருத்துவமனையிலும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.இந்தத் திட்டத்தின் கீழ் சிகிச்சைபெற பணம் ஏதும் நீங்கள் கட்டத் தேவையில்லை. இந்தத் திட்டத்தினால் ஏற்படும் செலவை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்துகொள்கின்றன.

    Advertisement

    ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இதுவரை 43 கோடி பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.1.6 லட்சம் கோடி மதிப்பிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்து தனது 172-வது அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. அதில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

    English Summary

    Is the Central Government's Ayushman Bharat insurance coverage increasing to ₹10 lakh? How can one avail the benefits?