இது இந்திய தேசியக்கொடியா? அயர்லாந்து கொடியை சட்டையில் குத்திய பிரதமர் மோடி? காங்கிரஸ் விமர்சனம்

  • டெல்லி: சுதந்திர தினத்தையொட்டி இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார். அப்போது அவர் தனது உடையில் இந்திய தேசியக்கொடிக்கு பதில் அயர்லாந்து நாட்டின் தேசியக்கொடியை வைத்து அந்த நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடி உள்ளதாக காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.

    Advertisement

    இன்று நம் நாட்டின் 80வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    Advertisement

    ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும் பிரதமர் மோடி அணியும் உடை அதிக கவனம் பெறும். அந்த வகையில் இன்றும் அவரது உடை பேசும் பொருளானது. இன்றைய விழாவில் பிரதமர் மோடி சிவப்பு நிற 'பந்தனி' (Bandhani) வகையை சேர்ந்த தலைப்பாகை அணிந்திருந்தார். வெள்ளை நிற குர்தா, சாக்லேட் பழுப்பு நிற கோட் அணிந்து அணிந்திருந்தார்.

    அவரது பாக்கெட்டில் நம் நாட்டின் தேசியக்கொடியை குறிக்கும் வகையில் காவி, வெள்ளை, பச்சை நிறத்தில் பாக்கெட் ஸ்கொயர்களை அணிந்திருந்தார். இந்த பாக்கெட் ஸ்கொயர் தான் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

    Advertisement

    இந்த விஷயத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பவன் கேரா விமர்சனம் செய்துள்ளார். இவர் ங்கிரஸ் கட்சியில் ராஜ்யசபா எம்பியாகவும், காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பர பிரிவின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் தான் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி இன்று சுதந்திர தினவிழாவில் பங்கேற்ற போட்டோவை பதிவிட்டுள்ளார். அதில் அவரது பாக்கெட்டில் இருந்து தேசியக்கொடியை குறிக்கும் பாக்கெட் ஸ்கொயரை வட்டமிட்டு காட்டி சாடியுள்ளார்.

    அதில், ''சாஹிப் (பிரதமர் மோடி) உருதுவில் (உருது எழுத்துக்கள் இடதுபுறத்தில் இருந்து எழுதப்படாமல் வலதுபுறத்தில் இருந்து எழுதப்படுகிறது) தேசியக்கொடியை அணிந்திருப்பது போல் உள்ளது. இல்லாவிட்டால் அவர் இந்தியாவிற்கு பதிலாக அயர்லாந்தின் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறார்'' என்று கூறி விமர்சனம் செய்துள்ளார். அதாவது நம் நாட்டின் தேசியக்கொடியில் முதலில் காவி நிறம், 2வது வெள்ளை நிறம் நடுவில் சக்கரம் இருக்கும். மூன்றாவதாக பச்சை நிறம் இருக்கும்.

    Advertisement

    ஆனால் பிரதமர் மோடி இன்று அணிந்திருந்த பாக்கெட் ஸ்கொயரில் அயர்லாந்து நாட்டின் கொடியை போல் இருந்தது. மேலும் அதை கவனிக்கும்போது முதலில் பச்சை நிறம், பிறகு வெள்ளை அதன்பிறகு காவி நிறம் இருப்பது போல் தெரிகிறது. இதனை சுட்டிக்காட்டி தான் பவன்கேரா இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

    English Summary

    Prime Minister Modi hoisted the national flag at the Red Fort in Delhi today to mark Independence Day. The Congress party has criticized him, alleging that instead of the Indian national flag, he displayed the national flag of Ireland on his attire, effectively celebrating that country's Independence Day.