போலீஸ் யூனிபார்மில் தீவிரவாதிகள்! டெல்லி போராட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி? அதிர்ச்சி தகவல்

  • கொல்கத்தா: டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்திற்குள் போலீஸ் யூனிபார்மில் ஊடுருவி பயங்கரவாதிகள் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டதாக மேற்கு வங்க சிறப்பு அதிரடிப்படை அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியை இவர்கள் டார்கெட் செய்திருந்ததாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    நீட் தேர்வுக்கு எதிராக கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்தது. ஓரிரு இடங்களில் மட்டுமே வன்முறை ஏற்பட்ட போதிலும், பெரும்பாலும் அமைதியான முறையிலேயே போராட்டம் நடந்தது. அதேநேரம், போராட்டத்தில் சிலர் புகுந்து சிலர் திட்டமிட்டு வன்முறையை ஏற்படுத்த முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.

    Advertisement

    தீவிரவாதி கைது

    இதற்கிடையே இரு நாட்களுக்கு முன்பு ஹமீம் மொண்டல் என்பவரை மேற்கு வங்க சிறப்பு அதிரடிப்படை கைது செய்தது. மேற்கு வங்கத்தின் பூர்பா பர்தமான் மாவட்டத்தை சேர்ந்த இவர் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதி என சொல்லப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக எஸ்டிஎஃப் தெரிவித்துள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி கவுரவ் சர்மா, "ஹமீம் மொண்டல் போலீஸ் யூனிபார்மில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் நுழைய வேண்டும் என்பதே பிளான். அதன் மூலம் அங்கு கலவரத்தை ஏற்படுத்துமாறு பாகிஸ்தானில் இருந்து அவருக்கு உத்தரவு வந்திருந்தது. இதன் மூலம் மாணவர் போராட்டத்தை வன்முறையாக மாற்றுவதே அவர்கள் சதி திட்டம்.

    Advertisement

    சுவேந்து அதிகாரி

    அதுமட்டுமின்றி, மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு மற்றும் பயண விவரங்களை சேகரிக்கும் பொறுப்பும் ஹமீமிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. முதல்வர் சுவேந்து அதிகாரி அவர்களின் முக்கிய டார்கெட்டாக இருந்தார். அவர் பாதுகாப்பின்றி இருக்கும் இடங்கள் மற்றும் நேரங்கள் குறித்து தகவல் சேகரிக்குமாறு ஹமீமுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது" என்று கவுரவ் சர்மா கூறினார்.

    ஹமீமிடம் நடத்தப்பட்ட விசாரணையில்.. மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பலர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களை பிடிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரை இப்போது 14 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    Advertisement

    ஹனி டிராப்

    இதற்கிடையே ஹமீமின் காதலியான அர்பிதா சர்கார் என்பவரையும் போலீசார் ஜார்கண்டில் வைத்து கைது செய்துள்ளனர். அம்மாநில அமைச்சர் உமேஷ் ராயின் மகனை ஹனிடிராப் மூலம் சிக்கவைத்து கடத்தி, அவரது குடும்பத்திடம் பணம் பறிக்க இருவரும் சதித்திட்டம் தீட்டியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுவும் கூட பாகிஸ்தான் தீவிரவாதிகள் உத்தரவின்படியே நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    உமேஷின் மகன் மட்டுமின்றி, பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகளை ஹனிடிராப் செய்து, அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்களை ஹமீமிடம் பகிர்ந்ததாகவும் இவை எல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உத்தரவின்படியே நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இருவரிடமிருந்தும் இங்கிலாந்து மற்றும் மெக்சிகோ நாடுகளின் சர்வதேச சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சிம்கள் மூலமாகவே பாகிஸ்தான் தீவிரவாதிகளை இவர்கள் தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    Advertisement

    பின்னணி

    ஹமீமும் அர்பிதாவும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளனர். பிறகு அப்படியே இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இருவரும் சேர்ந்தே பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்காக வேலை செய்துள்ளனர். இவர்கள் சமூக வலைத்தளங்களிலேயே தீவிரவாத சிந்தனையால் ஈர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    English Summary

    West Bengal STF claims a suspected Jaish-e-Mohammed operative planned to infiltrate Neet protest(நீட் போராட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி சதி): Terror plot in Neet protest latest news in tamil.