போக்குவரத்துக்கு தடை, இன்டெர்நெட் முடக்கம்! ஜந்தர் மந்தரை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த டெல்லி போலீஸ்!

  • டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில், நிலையை கட்டுப்படுத்த அந்த பகுதியை டெல்லி போலீசார் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றுள்ளனர்.

    Advertisement

    அக்.2 அன்று நாடு முழுவதும் போராட்டம் நடந்த காக்ரோச் ஜனதா கட்சி (CJP) மற்றும் இடதுசாரி கட்சிகளும் அமைப்புகளும் அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி மும்பையில் CJP அமைப்பும், டெல்லி ஜந்தர் மந்தரில் இடதுசாரி அமைப்புகளும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

    Advertisement

    ஜந்தர் மந்தர் பகுதிக்கு செல்லும் சன்சாத் மார்க் மற்றும் கேரளா ஹவுஸ் ஆகிய 2 முக்கிய நுழைவுப் பாதைகளும் நூற்றுக்கணக்கான டெல்லி போலீசார், சி.ஏ.பி.எஃப் மற்றும் ஆர்.ஏ.எஃப் வீரர்களால் முழுமையாக முடக்கப்பட்டிருக்கிறது. அசோகா ரோடு, சன்சாத் மார்க் போன்ற பகுதிகளில் பொது வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 4000 போலீசார் குவிக்கப்பட்டிருப்பதோடு, ட்ரோன் மூலமும் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நாடாளுமன்ற ரோடு பகுதி முழுவதும் BNSS பிரிவு 163ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக 5க்கும் மேற்பட்டவர்கள் கூடுவது, முழக்கமிடுவது, கொடிகள் மற்றும் போஸ்டர்களை ஏந்துவது தடை செய்யப்பட்டிருக்கிறது. டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் போராட்டக் களத்திற்கு அருகில் உள்ள ராஜீவ் சவுக், படேல் சவுக், ஜன்பத், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செக்ரடேரியட் உள்ளிட்ட 12 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடியுள்ளது.

    Advertisement

    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி SFI, DYFI, AISA, NSUI போன்ற மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினரும், எதிர்க்கட்சிகளும் இந்த முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட முயன்ற முன்னாள் டெல்லி முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி தலைவர் சௌரவ் பரத்வாஜ், எம்பி சஞ்சய் சிங், அரசியல் ஆர்வலர் யோகேந்திர யாதவ் மற்றும் AISA தேசிய தலைவர் நேஹா போரா உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.

    English Summary

    Jantar Mantar: Protests against Chief Election Commissioner Gyanesh Kumar have intensified at Delhi's Jantar Mantar. Meanwhile, the Delhi Police have attempted to bring the area fully under control to manage the situation.