கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது!

  • டெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தொடக்கத்தில் போலீசார் அனுமதி மறுத்தனர். பின்னர் ஒரு வழியாக அனுமதி கொடுத்தனர். இருப்பினும் இப்போராட்டத்தில் பங்கேற்ற 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்திருந்தனர்.

    Advertisement

    நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை அறிவித்திருந்தது. இதற்காக இந்த அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே அமெரிக்காவிலிருந்து இன்று காலை டெல்லி வந்திருந்தார். இதனையடுத்து காலை 10 மணியளவில் போராட்டம் நடைபெற்றது.

    Advertisement

    இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை முதலில் அனுமதியளித்திருந்தது. பின்னர் அனுமதி கொடுத்திருந்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். போராட்டத்தில் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், மொத்த கல்வித்துறையும் சீரமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

    அதேபோல, இந்த போராட்டத்திற்கு இடதுசாரி மாணவர் அமைப்புகளான இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதன் தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர். இப்படி இருக்கையில், இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களில் 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

    Advertisement

    இந்த கைது நடவடிக்கை போராட்டக்காரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தொடக்கத்தில் அனுமதி மறுத்து, பின்னர் அனுமதி கொடுத்து இப்போது வந்து கைது செய்வதா? என்று போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    ஆரம்பத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், ஜந்தர் மந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடாளுமன்ற சாலை பகுதிகளில் திடீரென ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவியத் தொடங்கினர். இதனால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க டெல்லி போலீஸார் மற்றும் அதிரடிப் படையினர் அந்தப் பகுதியைத் தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கைது நடவடிக்கையும் பதற்றம் ஏற்படாமல் தடுக்கத்தான் என்று விளக்களிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    சில போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, களத்தில் இருந்த இளைஞர்கள் மத்தியில் லேசான பதற்றம் ஏற்பட்டது.ஆனால், கட்சியின் நிறுவனரான அபிஜீத் திப்கே மற்றும் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் ஆகியோர், "யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம். காவல்துறையினருக்கு ரோஜாப் பூக்களைக் கொடுத்து அமைதியான முறையில் நமது அறப்போராட்டத்தைத் தொடர்வோம்" என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

    English Summary

    A protest was held today at Jantar Mantar in Delhi on behalf of the Karappan Poochi Janata Party. Initially, the police denied permission for the protest but eventually granted it. Nevertheless, the Delhi police arrested six individuals who participated in the protest.