இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம்

  • பெங்களூர்: இந்தியாவில் இருந்து மாம்பழங்கள் வாங்க திடீரென்று நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான ஜப்பான் தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவின் பின்னணி குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    இந்தியாவில் மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. நம் நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நம் நாட்டின் மாம்பழங்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான ஜப்பானுக்குள் அதிகளவில் மாம்பழங்கள் ஏற்றுமதியாகி வருகிறது.

    Advertisement

    2006ம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக மாம்பழம் ஜப்பானுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கேசர், அல்போன்சா, லங்ரா, பங்கனபள்ளி மாம்பழங்கள் உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த மாம்பழங்கள் ஏற்றுமதியாகி வருகின்றன.

    இந்நிலையில் தான் நம் நாட்டின் மாம்பழங்களுக்கு ஜப்பான் திடீரென்று தடை விதித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் மாம்பழ சீசன் தொடங்கும்போது ஜப்பான் ஆய்வாளர்கள் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள். நீராவிக் வெப்ப சிகிச்சை (VHT அல்லது Vapour heat treatment) முறையை பார்வையிடுவார்கள். இந்த விஎச்டி என்பது மாம்பழங்களில் உள்ள பழ ஈக்கள் போன்ற பூச்சிகளை ஒழிப்பதற்காக மாம்பழங்களைச் சூடான மற்றும் ஈரப்பதமான காற்றுக்கு உட்படுத்தும் முறையாகும். ஜப்பான், கொரியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதி தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

    Advertisement

    ஆனால் இந்த ஆண்டு ஜப்பான் ஆய்வாளர்களின் ஆய்வின்போது இந்த முறையில் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் உத்தரப்பிரதேசத்தின் ரெஹ்மான்பூரில் ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கண்டறியப்பட்ட குறைபாட்டால் தான் இந்திய மாம்பழங்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே அமெரிக்காவின் வரி விதிப்பு, ஈரான் உடனான வர்த்தகத்தால் கடல் வர்த்தகம் பாதிப்பு உள்ளிட்டவற்றால் நம் நாட்டின் வர்த்தகர்கள், விவசாயிகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டுக்கு வருவாய் ஏற்பட்டுள்ளது. பலரும் நஷ்டத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் ஜப்பானின் இந்த தடை உத்தரவு நம் நாட்டின் மாம்பழ விவசாயிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் தடை விதிப்பது இது முதல் முறையல்லல. இதற்கு முன்பு 1986ல் தடை விதிக்கப்பட்டது. அந்த தடை 20 ஆண்டுகள் கழித்து கடந்த 2006ல் நீக்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து 20 ஆண்டுகள் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஏற்றுமதிக்கு தடை விழுந்துள்ளது.

    English Summary

    Japan-one of our country's closest allies-has suddenly imposed a ban on the import of mangoes from India. Shocking details regarding the background of this ban order have now come to light.