ராகுல் காந்திக்கு எதிராக கோஷமிட்ட பாஜக எம்பி.. பக்கத்தில் போய் பிரியங்கா காந்தி செய்த செயல்!

  • டெல்லி: ஜார்கண்ட்டில் அரசு தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை ராகுல் காந்தி சந்திக்கவில்லை என்று இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பாஜக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்பி ஒருவர் கோஷமிட்ட நிலையில் அதனை கவனித்த பிரியங்கா காந்தி பக்கத்தில் சென்று ராகுல் காந்தி ஜார்கண்ட் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறிய சம்பவம் கவனம் பெற்றது.

    Advertisement

    ஜார்கண்ட்டில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்தி வருகின்றன. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன் உள்ளார்.

    Advertisement

    இந்நிலையில் தான் ஜார்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சேவைகள் தேர்வு, ஜேஎஸ்எஸ்சி தேர்வுகள் உள்ளிட்டவற்றின் வினாத்தாள் கசிந்ததாக கூறி மாணவர் அமைப்பினர் கடந்த 2 வாரமாக போராடி வருகின்றனர். டெல்லியில் 'நீட்' வினாாத்தாள் கசிவுக்கு எதிராக 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர்' நடத்திய போராட்டத்தை போல் இந்த போராட்டம் நடந்து வருகிறது.

    இதனா் ஜாரகண்ட் அரசு வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரணை நடத்தி 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளதோடு, அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி போராட்டம் நடத்துவோரிடம் பேச்சுவார்த்தை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. தேர்வை ரத்து செய்ய அரசு மறுப்பதால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

    Advertisement

    இதனால் கோபமான போராட்டக்காரர்கள் நேற்று ஜார்கண்ட் சட்டசபையை நோக்கி பேரணி சென்றனர். போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. தண்ணீர் பீய்ச்சியடித்து போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர். இந்நிலையில் தான் ஜார்கண்ட்டில் மாணவர்கள் மீதான தடியடி போராட்டத்தை கண்டித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பிக்கள் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்தனர். 'நீட்' வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் அரசு தேர்வு வினாத்தாள் கசிவில் மவுனமாக உள்ளார். மாணவர்களை சந்தித்து பேசவில்லை என்று குற்றம்சாட்டினர். மேலும் Shame Shame Rahul Gandhi என்று கோஷமிட்டனர்.

    Advertisement

    இந்த சமயத்தில் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தார். பாஜக எம்பிக்கள் கையில் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்துவதை பார்த்த பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்துக்குள் செல்ல நடந்தார். அப்போது பாஜக எம்பி ஒருவர் ஜார்கண்ட்டில் போராட்டம் நடத்தும் மாணவர்களை ராகுல் காந்தி சந்திக்கவில்லை என்று கோஷமிட்டார்.

    இதனை கவனித்த பிரியங்கா காந்தி அவர் அருகே சென்று சிரித்தபடி, ''ராகுல் காந்த போராட்டம் நடத்தும் மாணவர்களை சந்தித்துவிட்டார்'' என்றார். ஆனாலும் பாஜக எம்பி விடவில்லை. தொடர்ந்து ராகுல் காந்திக்கு எதிராக கோஷமிட்டார். இதையடுத்து பிரியங்கா காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    English Summary

    Students have been protesting over the issue of a question paper leak in a government examination in Jharkhand. Today, BJP MPs staged a protest within the Parliament complex, alleging that Rahul Gandhi had not met these students. Amidst the protest, when a BJP MP raised slogans against Rahul Gandhi, Priyanka Gandhi stepped forward to point out that Rahul Gandhi had indeed held discussions with the protesters from Jharkhand-an incident that drew significant attention.