பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறல்.. போராட்டத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்ட டெல்லி போலீஸ் அதிகாரி?

  • டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்த போராட்டத்தில் பெண் பத்திரிகையாளரிடம் டெல்லி ஏசிபி சில்மிஷத்தில் ஈடுபட்டிருப்பதாக காக்ரோச் ஜனதா கட்சியின்(CJP) தலைவர் அபிஜித் தீப்கே குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "பெண் சுயாதீன பத்திரிகையாளரிடமிருந்து இப்போதுதான் கால் வந்தது. ஏசிபி விவேக் பகத் தன்னிடம் தவறாக நடந்துக்கொண்டதாகவும், தகாத முறையில் அவர் தொட்டதாகவும் கூறினார். இது குறித்து புகார் அளிக்க முயன்றபோது காவல்துறை அதை ஏற்க மறுத்துவிட்டது. டிசிபி ஏன் விவேக் பகத்தை காப்பாற்ற முயற்சிக்கிறார்? டிசிபி சச்சின் சர்மா, அமித்ஷாவின் நம்பிக்கைக்குரிய அதிகாரியா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    Advertisement

    டெல்லியில் தீவிரமடையும் போராட்டம்

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி நாட்டின் 2 முக்கிய நகரங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. அக்.2ம் தேதி மும்பையின் சிவாஜி பார்க் பகுதியில் CJP அமைப்பினரும், அதே நாளில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் AISA, SFI, DYFI போன்ற இடதுசாரி மாணவர்கள், இளைஞர் அமைப்பினரும் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர். டெல்லியில் AISA தலைவர் மாணவி நேஹா போரா இந்த போராட்டத்தை லீட் செய்து வருகிறார்.

    இந்நிலையில் டெல்லி போராட்டத்தில் செய்தி சேகரிக்க வந்த பெண் பத்திரிகையாளரிடம் காவல்துறை அதிகாரி பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருப்பதாக புகார்கள் எழுந்திருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸ் மீது ஏற்கெனவே போராட்டக்காரர்கள் புகார்களை அடுக்கி வருகின்றனர். போராடுபவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வது, தாக்குவது, போராட்டக்களத்திற்கு வருபவர்களை தடுத்து நிறுத்துவது போன்ற குற்றச்சாட்டுகள் டெல்லி போலீஸ் மீது வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு, போராட்டக்காரர்களை மேலும் டென்ஷனாக்கியிருக்கிறது.

    English Summary

    Journalist Alleges ACP Vivek Bhagat Misbehaved: Amidst an ongoing protest at Delhi's Jantar Mantar demanding the resignation of the Chief Election Commissioner, Abhijit Deepke, leader of the Cockroach Janata Party (CJP), has alleged that a Delhi ACP engaged in inappropriate behavior with a female journalist during the protest.