மத்திய அரசை கவிழ்க்க சதி! பகீர் கிளப்பிய ஜேபி நட்டா.. டெல்லி பேரணியால் ராகுல் காந்திக்கு வார்னிங்

  • டெல்லி: '' 'இந்தியா' கூட்டணி பேரணி மூலம் ஆட்சி மாற்றம் செய்ய ராகுல் காந்தி சதி செய்கிறார். ஆனால் இந்தியாவில் வீக்கான ஆட்சி இல்லை. இதனால் தீவைப்பு சம்பவங்கள், கலவரங்கள் மற்றும் ஆட்சி மாற்றத்துக்கான செயல்திட்டத்தை முன்னெடுக்க முடியாது'' என்று மத்திய அமைச்சர் ஜேபி நட்டா வார்னிங் கொடுத்தார்.

    Advertisement

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி டெல்லியில் ராகுல் காந்தி தலைமயைில் இன்று பேரணி நடந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் இருந்து திறந்த வாகனத்தில் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் ராம்லீலா மைதானம் நோக்கி செல்கின்றனர்.

    Advertisement

    அதன்பிறகு ராம்லீலா மைதானத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சியினரின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனால் தற்போது 'இந்தியா' கூட்டணி கட்சிகளை சேர்ந்தவ ஏராளமான தலைவர்கள், தொண்டர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர்.

    இந்நிலையில் தான் 'இந்தியா' கூட்டணி ஆட்சி மாற்றத்துக்கான சதியுடன் செயல்படுவதாக மத்திய அமைச்சர் ஜேபி நட்டா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுபற்றி ஜேபி நட்டா கூறுகையில்,'இந்தியா கூட்டணி பேரணி மூலம் ஆட்சி மாற்றம் செய்ய ராகுல் காந்தி சதி செய்கிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவும், அரசை சீர்குலைக்கவும் காங்கிரஸ் தலைவர்கள முயன்று வருகின்றனர்.

    Advertisement

    அதேவேளையில் இந்தியாவில் இருப்பது வாழைப்பழ ஆட்சி (வீக்கான அரசு)அல்ல. இதனால் யார் வேண்டுமானாலும் தீ வைப்பு சம்பவங்களைத் தூண்டவோ, கலவரங்களைத் தூண்டவோ அல்லது ஆட்சி மாற்றத்திற்கான செயல்திட்டத்தை முன்னெடுக்கவோ முடியாது.

    1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களுக்கு சீக்கியர்களிடம் மன்னிப்பு கேட்க காங்கிரஸ் தவறிவிட்டது. இன்றைய பேரணி என்பது ஆட்சியில்
    குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி தான்.

    பொய்களையும், வதந்திகளையும் பரப்புதல், தெருக்களில் கலவரத்தை தூண்டுதல், பொருளாதாரத்தை சிதைத்தல்மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நிலைகுலைய செய்ய முயற்சித்தல் ஆகியவற்றை உள்ளடக்கி ராகுல் காந்தி செயல்பட்டு வருகிறார்'' என பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

    English Summary

    Union Minister JP Nadda says that, "Rahul Gandhi is conspiring to bring about a change in government through the 'INDIA' alliance rallies. However, India does not have a weak government. Therefore, attempts to orchestrate acts of arson, riots, or a plan to topple the government will not succeed".