வழக்கம் போல வாயை விட்டு வாங்கி கட்டிக்கொண்ட கங்கனா! மாணவர் போராட்டம் பற்றி என்ன பேசினார்னு பாருங்க

  • டெல்லி: மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்களும், இளைஞர்களும் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தி வரும் நிலையில், இந்த போராட்டம் குறித்து பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

    Advertisement

    கங்கனா ரனாவத் கூறியதாவது, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, போராட்டக்காரர்களும், சில அமைப்பை சேர்ந்தவர்களும் கைகளை உயர்த்தி கோஷம் போடுவதன் மூலம் தங்களுக்கு சாதகமான முடிவை எடுக்க தூண்டுகின்றன. அவர்கள் என்ன சொன்னாலும்.. நாடாளுமன்றத்தில்தான் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. தெருக்களில் அல்ல!

    Advertisement

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சிதான் போராட்டங்களை தூண்டி விடுகிறது. இதுபோன்ற செயல்கள் நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரானது. யாரை பதவியில் வைத்திருக்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு தெரியும். அரசாங்கத்தை மிரட்டி பணிய வைக்க முடியாது. பொதுப்பிரச்சனைகள் மற்றும் அரசாங்கத்தின் முடிவுகள் குறித்து விவாதிக்கவும், கேள்விகளை எழுப்புவதற்கும் சரியான இடம் நாடாளுமன்றம்தான். அதைவிட்டு விட்டு இப்படி வெளியில் ரகளையில் ஈடுபடுவது சரியில்லை" என்று கூறியிருக்கிறார்.

    நீட் தேர்வு குளறுபடியால் ஏராளமான மாணவர்கள் உயிரை விட்டிருக்கிறார்கள். இந்த குளறுபடிகள் தற்போது சிபிஎஸ்இ வரை நீடித்திருக்கிறது. இதை சரி செய்யதான் மாணவர்களும், இளைஞர்களும் ரோட்டில் இறங்கி போராடுகின்றனர். இப்படியான போராட்டத்தை ரகளை என்று கங்கனா ரனாவத் கூறியிருப்பது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    கங்கனா, மக்கள் போராட்டங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை இது முதல் முறை கிடையாது. ஏற்கெனவே விவசாயிகள் போராட்டம் குறித்து இதே போல சர்ச்சை கருத்தை தெரிவித்து ஏராளமான விமர்சனங்களை வாங்கி கட்டிக்கொண்டார். அந்த வகையில், இந்த கருத்துக்கும் பல்வேறு தரப்பினர் கங்கனாவுக்கு கண்டனங்களை தெரிவிக்க தொடங்கியிருக்கின்றனர்.

    போராட்டம் காரணமாக அமித்ஷாவை சந்தித்தருந்த தர்மேந்திர பிரதான் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருந்தார். கொஞ்ச நேரத்திற்கு முன்பு இந்த சந்திப்பு நிறைவடைந்திருக்கிறது. ஆனால் இன்னும் அவர் செய்தியாளர்களை சந்தித்து எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Kangana Ranaut: As students and youths march towards Parliament demanding the resignation of the Union Education Minister, BJP MP and actress Kangana Ranaut has made controversial remarks regarding the protest.