கார்கில் வெற்றி தினம்: பாகிஸ்தானை பணிய வைத்த இந்தியா! தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி!

  • டெல்லி: கடந்த 1999ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றியின் 27வது ஆண்டை நினைவு கூறும் விதமாக, போரில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவிடங்களில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

    Advertisement

    இது குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது x பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது, "கார்கில் வெற்றி தின திருநாளில் தாய்நாட்டை பாதுகாக்க தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் ஈடு இணையற்ற வீரம், தளராத உறுதி மற்றும் தேசபக்தி ஆகியவை நமது ராணுவத்தின் புகழ்பெற்ற பாரம்பரியத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன. இந்த தேசம் அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    அதேபோல பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நமது வீரர்கள் காட்டிய அசாதாரணமான துணிச்சலுக்கும், அர்ப்பணிப்புக்கும் தேசம் இந்த கார்கில் வெற்றி தினத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. மிகவும் சவாலான சூழ்நிலையிலும் அவர்கள் வெளிப்படுத்திய வீரம் என்றும் தேசிய பெருமையின் அடையாளமாக திகழும்" என தனது x பக்கத்தில் மோடி புகழாரம் சூட்டியிருக்கிறார்.

    லடாக்கின் டிராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் ராணுவ தளபதி ஜெனரல் தீரஜ் சேத் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த நிகழ்வில் பங்கேற்று ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். முன்னதாக சௌர்யா சந்தியா மற்றும் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சிகளும் தொடங்கின.

    Advertisement

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜே.பி.நட்டா என பல்வேறு தலைவர்களும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    English Summary

    Kargil: India emerged victorious against Pakistan in the Kargil War of 1999. To commemorate the 27th anniversary of this victory, leaders have paid tribute at the memorials of the martyrs who lost their lives in the conflict.