தமிழக அரசு நிலைப்பாட்டில் மாற்றமில்லை தானே.. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. உச்ச நீதிமன்றம் கேள்வி!

  • டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கிய தமிழக அரசின் முடிவுக்கு எதிரான வழக்கில், விளக்க மனு தாக்கல் செய்ய அரசுக்கு மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    தவெக தலைவர் விஜய் கடந்தாண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்திற்கு பிரச்சாரத்திற்கு சென்றிருந்தார். அங்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட மிக அதிக அளவில் மக்கள் திரண்டிருநத்தாக கூறப்படுகிறது. அப்போது விஜய் பிரச்சாரத்திற்கு வந்தபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    Advertisement

    கரூர் சம்பவம்

    இக்கோர விபத்தில் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரச்சார நிகழ்வில் இவ்வளவு பெரிய உயிரிழப்புகள் இதுவரை ஏற்பட்டதே இல்லை. இதனால் இது தமிழ்நாட்டை தாண்டி தேசியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே தவெக அரசு அமைந்த பிறகு இந்த நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தவெக முடிவு செய்தது.

    உச்ச நீதிமன்றம்

    இருப்பினும், இதை எதிர்த்து தொடரப்பட்டது. பொது வேலைவாய்ப்பில் சம உரிமை தொடர்பான அரசியலமைப்பு விதிகளை சுட்டிக்காட்டி, இந்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தான் நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது.

    Advertisement

    அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பதில் மனு அளிக்க 4 வாரம் அவகாசம் கோரினார். அப்போது நீதிபதிகள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கிய விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.

    4 வாரம் கால அவகாசம்

    இதனை தொடர்ந்து, "அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றால், எதற்காக விளக்க மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோருகிறீர்கள்?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இருப்பினும் அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்றார். தமிழக அரசு விளக்க மனு தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

    English Summary

    Supreme Court has granted Tamil Nadu government four more weeks to file its response in the case(கரூர் கூட்ட நெரிசல் உச்ச நீதிமன்றம்): Karur Stampede Jobs Case latest news in tamil.