கொல்கத்தா துர்கா பூஜாவில் பந்தல் சரிந்து கூட்ட நெரிசல்.. 17 பேர் பலி.. பலர் படுகாயம்

  • கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தவில் நடைபெற்ற் துர்கா பூஜையில் பந்தல் சரிந்து விழுந்துள்ளது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூட்டநெரிசலில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை நடைபெற்று வந்தது. மேற்கு கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த துர்கா பூஜாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பூஜை பந்தல் திடீரென சரிந்து விழுந்துள்ளது. இதையடுத்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கம் அடைந்துள்ளனர்.

    Advertisement

    கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்த நிலையில், 17 பேர் உயிரிழந்து இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

    என்ன நடந்தது? போலீசார் விளக்கம்

    கொல்கத்தாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஷோர் பகன் சர்போஜனின் பூஜா பந்தலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை உலுக்கிய இந்த கூட்ட நெரிசல் சம்பவம் பற்றி கொல்கத்தா போலீஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    "இன்று இரவு 7.40 மணியளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பூஜா பந்தலின் வெளியேறும் கேட் அருகே கட்டுக்கடங்காமல் கூட்டம் முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கனமழை பெய்த போது நெரிசல் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு தீ அணைப்பு போலீசார், மீட்பு குழுவினர் மருத்துவ குழுவினர் என அனைத்து வகையான நிவாரன பணி குழுக்களும் உடனடியாக வரவழைக்கப்பட்டன. தற்போது பூஜா பந்தல் மூடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெஞ்சை உலுக்கும் காட்சிகள்

    நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு மக்கள் தூக்கி செல்லும் காட்சிகளும் ஆம்புலன்ஸ்கள் சைரன்களை எழுப்பிய படி, மின்னல் வேகத்தில் செல்லும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெஞ்சை உலுக்கும் விதமாக அமைந்துள்ளன.

    Advertisement

    கூட்ட நெரிசல் பற்றி கொல்கத்தா காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "மழை பெய்ய தொடங்கியதும், பந்தலுக்கு வெளியே காத்திருந்த கூட்டம், பந்தலை நோக்கி நகர தொடங்கியுள்ளது. முண்டியடித்த போது சிலர் கீழே விழுந்ததால் நெரிசல் ஏற்பட்டுள்ளது" என்றார்.

    மேற்கு வங்க ஆளுநர் இரங்கல்

    பிரதமர் மோடியும் இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தசரா பண்டிகை நாளில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    கூட்ட நெரிசலில் பல இன்னுயிர்கள் பறிபோயுள்ளன. துர்கா பூஜா பந்தலில் ஏற்பட்ட சம்பவம் என் நெஞ்சை உலுக்குகிறது. இந்த துயரமான தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் உடனடியாக குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

    English Summary

    Kolkata Stampede: A stampede during Durga Puja celebrations in Kolkata has resulted in 17 deaths, causing shock and grief. The incident occurred in North Kolkata, West Bengal, when a Durga Puja *pandal* (temporary pavilion) collapsed. In the ensuing chaos, many people became trapped; they have since been rescued and admitted to hospitals.