நான் Gen Z.. ராணுவத்திடம் சண்டை போட்ட இளம்பெண்.. திடீரென மன்னிப்பு கேட்டு வீடியோ! என்ன நடந்தது

  • டெல்லி: லடாக்கில் சாலை மூடப்பட்டதால் பாதுகாப்பு படையினருடன் ஆவேசமாக வாக்குவாதம் செய்த பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி இருந்தது. இதற்கிடையே தற்போது அந்த பெண் இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் லடாக் காவல்துறையிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் ஏன் மன்னிப்பு கேட்டார் இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.

    Advertisement

    காஷ்மீரின் லடாக் சாலையில் 25 வயதான பெண் ஒருவர் பல மணி நேரம் காத்திருந்துள்ளார். பல மணி நேரம் காத்திருந்தும் சாலை மூடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தெளிவான தகவல் கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தி அடைந்த அந்த பெண், பாதுகாப்பு படையினர் உடன் வாக்குவாதம் செய்தார். அப்போது ஆவேசமாக சில வார்த்தைகளை சொல்லியிருந்தார்.

    Advertisement

    வீடியோ

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. அவர் ராணுவத்தை அவமதித்தாக சிலர் சாடினர். இதற்கிடையே அந்த பெண் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ராணுவத்தினரை அவமதிக்கும் நோக்கத்தில் தான் எதையும் பேசவில்லை என்றும் இந்த சம்பவத்தின் மூலம் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணமும் தனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக முதல்முறையாக பேசிய அந்த பெண், லடாக்கில் இருந்து டெல்லிக்கு சென்றபோது சாலை மூடப்பட்டிருந்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும், "அப்போது விஐபி ஒருவர் செல்வதற்காக சாலை மூடப்பட்டதாக தங்களுக்கு யாரும் கூறவில்லை. காலையில் 3 முதல் 4 மணி நேரம் காத்திருந்தோம். எவ்வளவு நேரம் ஆகும் என்று ஒரு ராணுவ வீரரிடம் கேட்டபோது, மேலும் ஒரு மணி நேரம் ஆகும் என்று கூறினார். அந்த ஒரு மணி நேரமும் கடந்துவிட்டது. ஆனால் சாலை திறக்கப்படவில்லை. அப்போது தான் அந்தச் சம்பவம் நடந்தது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    என்ன நடந்தது?

    கடந்த ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தபோது. அப்போது தான் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. டிராஸ் பகுதியில் உள்ள மினிமார்க் சோதனைச் சாவடி அருகே, மினிமார்க்-சோஜிலா-சோன்மார்க் சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது..

    சாலை மூடப்பட்டதால் பல பயணிகள் அங்கு காத்திருந்த நிலையில், அந்த பெண் பாதுகாப்புப் படையினரிடம் கேள்வி எழுப்பினார். குறிப்பாக ஒரு அமைச்சருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாக கூறி அவர் வாக்குவாதம் செய்தார். அப்போது அந்த பெண், "நாங்கள் Gen Z தலைமுறை. இந்த விஷயத்தை பொறுத்து கொள்ள மாட்டோம்" என்று அவர் பேசியிருந்தார். அந்த பெண்ணுக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுத்திருந்தனர். இது மொத்தமும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

    Advertisement

    வாக்குவாதம்

    இது குறித்து விளக்கமளித்துள்ள அந்த பெண், சுமார் 6 மணி நேரம் வரை மக்கள் காத்திருந்ததாகவும் அப்போது தான் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறினார். அவர் மேலும், "ஏற்கனவே அங்கு வாக்குவாதம் நடந்து வந்தது. அப்போது நான் அங்கு சென்றதில் இந்த சம்பவம் நடந்துவிட்டது. நீண்ட நேரம் காத்திருந்ததால் ஏற்பட்ட விரக்தியில் நான் சில வார்த்தைகளை விட்டுவிட்டேன். விரக்தியில் நான் பேசியது சரியானது அல்ல. தவறாக பேசிவிட்டேன்.

    மன்னிப்பு

    ஆனால், அந்த வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இதனால் பலரும் என்னை மோசமாக விமர்சித்து வருகிறார்கள். இதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் ஒரு சாதாரண 25 வயது பெண். இந்த விஷயம் இவ்வளவு பெரிதாகும் என்று எனக்கு தெரியாது. நாட்டில் உள்ள அனைவரிடமும், இந்திய ராணுவத்திடமும், ஜம்மு காஷ்மீர் போலீசாரிடமும், லடாக் காவல்துறையிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். குறிப்பாக உமர் அப்துல்லாவிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்" என்றார்.

    English Summary

    25-year-old woman whose heated argument with security personnel over a road closure in Ladakh(ராணுவத்திடம் சண்டை போட்ட இளம்பெண்): Gen Z woman fighting with Indian army.