சோம்பேறிகள், திறமையற்றவர்கள்.. அதிகாரிகளை கடுமையாக திட்டிய நடிகை கங்கனா ரணாவத்

  • டெல்லி: சோம்பேறிகள், திறமையற்றவர்கள் என அதிகாரிகளை நடிகையும், எம்பியுமான கங்கனா ரனாவத் திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை ஏன் முறையாக அமல்படுத்தவில்லை.. பொது நிதியை சரிவர பயன்படுத்தவில்லை என கூறி மிகக் கடுமையாக அதிகாரிகளை சாடினார்.

    Advertisement

    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த கங்கனா ரனாவத், கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்பியாக உள்ள கங்கனா ரனாவத் இமாசல பிரதேசத்தில் உள்ள தனது தொகுதிக்கு நேற்று ஆய்வுக்கு சென்றார். ஆய்வுக்கூட்டத்தின் போது அதிகாரிகளை கடுமையாக கடிந்து கொண்டது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    Advertisement

    கங்கனா ரனாவத் சர்ச்சை பேச்சு

    மாண்டி மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டத்தின் போது இந்த சம்பவம் நடைபெற்றது. மத்திய அரசின் திட்டங்களை ஏன் முறையாக அமல்படுத்தவில்லை என்றும், பொது நிதியை சரிவர பயன்படுத்தவில்லை எனவும் கூறி மிகக் கடுமையாக அதிகாரிகளை சாடினார். ஒரு கட்டத்தில் சோம்பேறிகள் எனவும் தகுதியற்றவர்கள் என்றும் கங்கனா ரனாவத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கங்கனா ரனாவத் கூறியதாவது:-

    எல்லாம் முழு சோம்பேறிகள்

    பொது பணம் தவறானவர்களின் கைகளுக்கு செல்லக் கூடாது. திட்டங்களை செயல்படுத்துவதில் எந்த ஒரு அலட்சியமும் காட்டக்கூடாது. பணிகளை செய்யாமல் கிடப்பில் போட்டால் நான் எப்படி ஊடகங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிப்பேன். பிரச்சினையை தீர்க்கும் காலம் சென்றுவிட்டது. இதெல்லாம் இரண்டு ஆண்டுகள் பழமையான விஷயங்கள். தற்போது, வேலையை முடித்துவிட்டு, வேலை முடித்துவிட்டோம் என்று எனக்கு அறிக்கை அளியுங்கள்.

    Advertisement

    11 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம். ஆனால் ஒரு சிறு வேலை கூட நடக்கவில்லை. இது திறமையற்றது, மிகவும் கேவலமானது. ஊடகங்களிடம் நான் போய் என்ன சொல்வது? அவர்கள் (அதிகாரிகள்) சம்பளம் வாங்க மட்டுமே வருகிறார்கள் என்று சொல்ல முடியுமா? நமது மாநில மக்கள் பற்றி நான் என்ன சொல்வது? அவர்களின் பணித்திறன் பற்றி என்ன சொல்வது? அவர்கள் எல்லாம் முழு சோம்பேறிகள், தகுதியற்றவர்கள்.. இப்படியா நான் தேசிய ஊடகங்களிடம் சொல்ல முடியும்?

    உண்மையான பயனாளிகளை சென்றடைய வேண்டும்

    மத்திய அரசின் திட்டங்கள் பேப்பர்களிலேயே முடங்கிவிடக்கூடாது. திட்டங்களின் பலன் கண்டிப்பாக கிராமங்களையும் உண்மையான பயனாளிகளையும் சென்றடைய வேண்டும். வளர்ச்சி திட்டங்களின் தரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்தும் அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திட்டம் முடிவடைவதையும் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

    Advertisement

    கங்கனா ரனாவத் இதுபோல அதிகாரிகளை கடிந்து கொள்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோன்றதொரு கூட்டத்தில் அதிகாரிகளிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அக்டோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் போது, "ஆய்வு பணிகளை எளிதாக எடுத்துக்கொள்ளகூடாது.. முழு அக்கறையுடன் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அதிகாரிகளிடம் காட்டமாக கூறியிருந்தார்.

    English Summary

    Kangana Ranaut: Actress and MP Kangana Ranaut has sparked controversy by calling officials "lazy" and "incompetent." She severely criticized them for failing to properly implement Central Government schemes and for not utilizing public funds effectively.