‘நீட்’ தேர்வே வேண்டாம்.. ‘அனிதா’ தற்கொலையை சொல்லி லோக்சபாவில் உருக்கமாக பேசிய தயாநிதி மாறன்

  • டெல்லி: ''நீட் தேர்வுக்கு எதிராக தொடக்கம் முதலே தமிழக அரசு போராடி வருகிறது. நீட் தேர்வு என்பது விளிம்பு நிலை மாணவர்களின் மருத்துவ கனவுகளை சிதைக்கிறது. இதனால் நீட் தேர்வே வேண்டாம்'' என்று தமிழகத்தில் தற்கொலை செய்த 'அனிதா' என்ற மாணவியை நினைவு கூர்ந்து திமுக எம்பி தயாநிதி மாறன் பேசினார்.

    Advertisement

    வினாத்தாள் கசிவில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை மற்றும் அபராதத்தை அதிகரிக்கும் வகையிலான சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தது. பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்)திருத்த மசோதா, 2026 என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த மசோதா மீது 6 மணிநேரம் விவாதம் நடத்தப்படும். தேவை என்றால் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.
    இதற்கிடையே தான் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ எழுந்து எதிர்க்கட்சிகள் 8 மணிநேரம் விவாதம் நடத்த சொல்கின்றனர். ஆனால் மத்திய அரசு 10 மணிநேர விவாதத்துக்கு தயாராக இருப்பதாக கூறினார். இதையடுத்து ஒவ்வொரு எம்பிக்களும் பேச தொடங்கினர்.

    இந்த விவாதத்தில் திமுக சார்பில் தயாநிதி மாறன் எம்பி பேசினார். அப்போது அவர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற திமுகவின் நிலைப்பாட்டை வலியுறுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

    Advertisement

    தமிழ்நாட்டில் நீட் தேர்வை தொடக்கம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வை அறிமுகம் செய்யும்போதே நாங்கள் எதிர்த்தோம். மாணவர்கள் மருத்துவ இடங்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டபோதும் எதிர்த்தோம். மாணவர்கள் தற்கொலை செய்தபோதும் இந்த தேர்வை எதிர்த்தோம்.
    இது கோச்சிங் சென்டர்களுக்கான தேர்வு தானே தவிர திறனை அறிந்து கொள்வதற்கான தேர்வு இல்லை என்பதை கூறி கொண்டே வந்தோம். தொடர்ந்து நாங்கள் எதிர்த்து வந்தோம்.

    2016ல் நீட் தேர்வுக்கு எதிராக ராஜ்யசபாவில் திமுக வாக்களித்தது. 2017 ம் ஆண்டில் திமுக பொதுக்குழுவில் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு எம்பிக்கள் பிரதமர் மோடியை 2017 பிப்ரவரி மாதம் சந்தித்து நீட் தேர்வு ஏன் மாநிலத்துக்கு வேண்டாம்? என்று கூறினோம். 2017 செப்டம்பர் மாதம் தலித் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். முதல் தலைமுறை மாணவியும், வகுப்பில் முதல் மாணவியாகவும் இருந்தவர் அவர். அவரை பெற்றோரும், ஆசிரியர்களும் தோளில் தட்டி நீ கண்டிப்பாக டாக்டர் ஆவாய் என்று கூறினார்கள்.

    Advertisement

    நீட் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டுக்கு நீட் கொண்டு வரப்படாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். ஆனால் நீட் வந்தது. அனிதா கோச்சிங் சென்டர் போகவில்லை. சின்ன கிராமத்தில் இருந்து வந்த தலித் மாணவி. ஆனால் நீட் தேர்வில் அவர் ஃபெயில் ஆனார். சமுதாயத்தின் அனைத்து விஷயங்களிலும் தோற்றதாக கூறி தற்கொலை செய்து கொண்டார். அவரது தியாகத்திற்கு நாங்கள் சல்யூட் செய்கிறோம்.
    'நீட்' ரத்து செய்யக்கோி திமுக சார்பில் மாநில அளவிலான கூட்டம் நடத்தப்பட்டது.

    தமிழ்நாட்டில் நீட் விலக்கு கோரிய மசோதாவை முதல்வராக இருந்த ஸ்டாலின் நிறைவேற்றினார். ஆனால் ஆளுநர் ஏற்கவில்லை. 'நீட் தேர்வு என்பது மாணவர்களுக்கு எதிரானது. சீரற்ற தன்மையுடன் உள்ளது. இது தான் நீட் தேர்வில் உள்ள முக்கிய பிரச்சனையாகும். விளிம்புநிலை சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்புக்கான இடங்களில் சேர்வதற்கு நீட் தேர்வு தடையாக உள்ளன. தமிழ்நாட்டில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

    Advertisement

    நீட் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டதால் குறிப்பிடும்படியாக நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? என்பதை பார்க்க வேண்டும். வினாத்தாள் கசிவு காரணமாக முதல் நீட் தேர்வே ரத்து செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது. மேலும்
    இன்று மருத்துவப் பணியில் உள்ள மருத்துவர்கள் யாரும் நீட் தேர்வு எழுதியவர்கள் அல்ல. அவர்கள் உலகின் சிறந்த மருத்துவர்களில் ஒருவராக திகழ்கின்றனர்.

    இதனால் நீட் தேர்வு அவசியமற்றது. 'ஒரே இந்தியா, ஒரே தேர்வு' என்ற முறையை தேர்ந்தெடுக்காதீர்கள். நாங்கள் இந்தியாவின் ஒரு பகுதிதான், ஆனால் நீங்கள் விரும்பும் விதத்தில் நாங்கள் இருக்க மாட்டோம். நீட் தேர்வு தடை செய்யப்பட வேண்டும். நீட் விவகாரத்தில் நடந்த பிரச்சனையை மறைத்தவிட அரசு நினைத்தபோதிலும் தற்போது ஜென் ஸி மாணவர்களின் போராட்டத்தால் நாடாளுமன்றத்தில் நீட் தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. மாணவர்களின் போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட காவல் துறை நடவடிக்கைகள், இணையச் சேவை முடக்கம் வலி மிகுந்தது. நீட் தேர்வை தடை செய்ய வேண்டும். '' என்றார்.

    Advertisement

    மேலும் இந்த சமயத்தில், இந்த மசோதாவை இந்தி அல்லது சமஸ்கிருதத்தில் அறிமுகப்படுத்தாமல் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியதற்காக மத்திய அமைச்சருக்கு நன்றி என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கையும் கிண்டல் செய்யும் வகையில் பேசியிருந்தார்.

    English Summary

    "The Tamil Nadu government has been fighting against the NEET exam from the very beginning. The NEET exam shatters the medical dreams of students from marginalized backgrounds; therefore, we do not want the NEET exam at all," said DMK MP Dayanidhi Maran, recalling Anitha, a student from Tamil Nadu who died by suicide.