போர் திறனில் கைதேர்ந்தவர்.. இந்திய ராணுவ தலைமை தளபதியாக தீரஜ் சேத் நியமனம்.. யார் இவர் தெரியுமா?

  • டெல்லி: நம் நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக தற்போது உபேந்திர திவேதி உள்ளார். இவர் ஜூன் 30ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் தான் புதிய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    நம் நாட்டின் பாதுகாப்பை ராணுவ வீரர்கள் உறுதி செய்து வருகின்றனர். தற்போது நம் நாட்டின் ராணுவத்தின் தலைமை தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த 204ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார். இவர் நம் நாட்டின் 30வது ராணுவ தலைமை தளபதி ஆவார்.

    Advertisement

    இந்நிலையில் தான் உபேந்திர திவேதியின் ஜூன் 30ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதனால் புதிய ராணுவ தலைமை தளபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அதன்படி நம் நாட்டின் புதிய ராணுவ தலைமை தளபதியாக தீரஜ் சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய ராணுவ தலைமை தளபதி ஜூன் 30ம் தேதி ஓய்வு பெறும்போது அவரிடம் இருந்து தீரஜ் சேத் ராணுவ தலைமை தளபதி பொறுப்பை ஏற்பார். இனி தீரஜ் சேத் தான் நம் ராணுவத்தை வழிநடத்த உள்ளார். இவரது சொந்த ஊர் பற்றிய விவரம் பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பின்னணி என்ன?

    தீரஜ் சேத் கடந்த 1986ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவ பணியில் சேர்ந்தார். கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். இவர் 'ஹையர் கமாண்ட் கோர்ஸ்' (Higher Command Course) முடித்துள்ளார். பாரிஸில் உள்ள மதிப்புமிக்க 'கமாண்ட் அண்ட் ஸ்டாஃப்' படிப்பையும் முடித்துள்ளார்.

    40 ஆண்டு கால பணி

    இவர் 1986 டிசம்பரில் ஆர்மர்டு கார்ப்ஸில் (Armoured Corps) ராணுவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கடந்த 40 ஆண்டுகளாக ராணுவத்தில் வெவ்வேறு பணிகளில் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் ஆபரேஷன், Strategic மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்திய ராணுவத்தின் போர்த் திறனை மேம்படுத்துவதிலும், நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வந்த போர் திறனில் மாற்றங்களை கொண்டு வந்ததில் இவர் முக்கியமானவர். ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால் நம் ராணுவத்தை நவீனப்படுத்துவதில் பெரிய அளவில் பங்களிப்பு செய்துள்ளார். போர் துறை சார்ந்து வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் அதனை ஒருங்கிணைப்பதில் கைதேர்ந்தவர்.

    Advertisement

    முன்பு வகித்த பதவிகள்

    இவர் Armoured Regiment-யில் பிரிகேட் மற்றும் ஜம்மு காஷ்மீரில் கிளச்சிஎதிர்ப்பு படையின் தலைவராக செயல்பட்டுள்ளார். லெப்டினன்ட் ஜெனரலாக, இந்திய ராணுவத்தின் முக்கிய தாக்குதல் பிரிவுகளில் ஒன்றான 'சுதர்சன் சக்ரா கார்ப்ஸ்' (Sudarshan Chakra Corps) அமைப்புக்கு தலைமை வகித்துள்ளார். டெல்லி பிராந்தியத்தின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங்காக பணியாற்றி உள்ளார். ராணுவ கமாண்டராக பதவி உயர்வு பெற்ற பிறகு, தென்மேற்கு கமாண்ட் மற்றும் தெற்கு கமாண்ட் ஆகிய இரண்டு செயல்பாட்டு கமாண்டுகளுக்குத் தலைமை தாங்கி உள்ளார்.

    இவர் தற்போது நம் நாட்டின் ராணுவத்தின் துணை தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அவர் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    English Summary

    Chief of Army Staff: Upendra Dwivedi is currently the Chief of Army Staff of our country and is set to retire on June 30. Duet to this n officially announced that Lieutenant General Dheeraj Seth has been appointed as the new Chief of Army Staff.