மதம் மாறினால் பட்டியல் அந்தஸ்து இழப்பது உறுதி.. மறு ஆய்வு கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

  • டெல்லி: இந்து மதத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர், முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவுடன் முழுமையாக தனது பட்டியல் இன அந்தஸ்தை இழந்துவிடுகிறார். அதேநேரம் இந்து மத்தில் இருந்து சீக்கியம், புத்த மதம் மாறினால் மட்டுமே பட்டியல் இனத்தவர் அந்தஸ்தை இழப்பது இல்லை.. இந்த சூழலில் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    Advertisement

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். அதில் பாஸ்டராக பணியாற்றி வந்தார். அவர் மீது தாக்குதல் நடந்துள்ளது. சாதிப் பெயரைக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர் தன்னை மிரட்டியவர்கள் மீது எஸ்சி எஸ்டி சட்டத்தில் நடவடிக்கை கோரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

    Advertisement

    போலீசாரும் புகார் அளித்தனர். அந்த புகாரை எதிர்த்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், "என் மீது புகாரளித்தவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி பாஸ்டராகப் பணியாற்றி வருகிறார், எனவே அவருக்குப் பட்டியலினத்தவருக்கான எஸ்சி எஸ்டி சட்டப் பாதுகாப்பு செல்லாது; எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று முறையிட்டார்.

    இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிநாத் கிறிஸ்தவ மதத்தில் சாதிக் கட்டமைப்பு அங்கீகரிக்கப்படவில்லை; எனவே கிறிஸ்தவத்திற்கு மாறிய நபர் எஸ்சி,எஸ்டி சட்டத்தின்கீழ் பாதுகாப்பு பெற முடியாது என்று அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பாஸ்டர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    Advertisement

    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், 1950-ம் ஆண்டின் அரசியலமைப்பு (பட்டியல் இனம்) ஆணையின் 3-வது பிரிவில், இந்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே ஆரம்பத்தில் பட்டியல் இன அந்தஸ்து அளிக்கப்பட்டிருந்தது. பின்னர், சட்ட திருத்தங்கள் மூலம் சீக்கியம், புத்த மதம் ஆகிய மதங்களை பின்பற்றுபவர்களும் சேர்க்கப்பட்டார்கள்

    எனவே, 3 மதங்களை சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பட்டியல் இன அந்தஸ்து கிடைக்கும். இந்த மதங்கள் அல்லாத வேறு மதங்களுக்கு மாறியவர்கள் உடனடியாக தங்களது பட்டியல் இன அந்தஸ்தை இழப்பார்கள். பட்டியல் இனத்தினருக்கான சட்டப்பூர்வ சலுகைகள், இடஒதுக்கீடு, முன்னுரிமை, நலத்திட்டங்கள் ஆகியவற்றையும் இழப்பார்கள். ஒருவர் ஒரே நேரத்தில் ஆன்மிக காரணங்களுக்காக வேறு மதத்தை பின்பற்றிக்கொண்டு, இடஒதுக்கீடுக்காக இந்து மதத்தை பின்பற்ற முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.

    Advertisement

    இதற்கிடையே, இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், மறுஆய்வு மனுவையும், கடந்த மார்ச் 24-ந் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பையும் ஆய்வு செய்தோம். தீர்ப்பில் எந்த தவறும் இல்லை. எனவே, அதை மறுஆய்வு செய்யக்கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" இவ்வாறு அவர்கள் கூறினர்.

    English Summary

    In Hinduism, a person belonging to a Scheduled Caste completely loses their Scheduled Caste status upon converting to Islam or Christianity. The Supreme Court dismissed a petition seeking a review of this court order.