டெல்லி: முன்னாள் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதவி விலகியதை அடுத்து மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவைக்கு வரும் நவம்பர் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் அக்டோபர் 26ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான அறிவிக்கை (notification) வெளியாகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர் 2, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நவ.3 ஆம் தேதி செய்யப்படும்.
வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 5ஆம் தேதியாகும். வாக்குப் பதிவு நடைபெறும் நாள் நவம்பர் 12. அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். நவம்பர் 16-ஆம் தேதிக்குள் தேர்தல் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார். இவர் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறையின் இணையமைச்சராகவும் இருந்தார். இந்த நிலையில் அவர் தனது பதவியை கடந்த அக்டோபர் 14ஆம் தேதி ராஜினாமா செய்தார். வர போகும் 2029 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தவும், முழுநேரமாக களப்பணியாற்றவும் விரும்புவதாக கூறிதான் எல் முருகன் ராஜினாமா செய்ததாக சொல்லப்படுகிறது. எல் முருகன் ராஜினாமாவால் அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ராஜினாமா செய்த எல்.முருகனின் பதவிக்காலம் 2030 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 வரை இருந்தது. தற்போது இந்த காலியான இடத்திற்கு மத்திய பிரதேசத்தில் இருந்தே யாரேனும் போட்டியிடுவார்களா, இல்லை தமிழகத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் மூத்த தலைவர்கள் என பார்த்தால் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர்தான். இவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது போல் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழிசை சவுந்திரராஜனுக்கு எம்பி பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது. இவர் பாஜகவின் மூத்த பெண் தலைவர். நீண்டகாலமாக கட்சியில் இருப்பவர். பாஜகவுக்கு எதிராக யார் விமர்சனங்களை முன் வைத்தாலும் பதிலுக்கு நாகரீகத்துடன் வார்த்தைகளை பிரயோகப்படுத்தி பதிலடி கொடுப்பர். ரைமிங்காக பேசுவதில் வல்லவர். வரும் 2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் தர தமிழக பாஜகவினருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இல்லாவிட்டால் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் எம்பி தேர்தலில் வேட்பாளராக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். கடந்த 4 மாதங்களில் பதவியை ராஜினாமா செய்த 3வது மத்திய அமைச்சர் எல். முருகன் என்கிறார்கள். சிறுபான்மையினத் துறை மத்திய இணையமைச்சராக இருந்த ரவ்னீத் சிங் பிட்டு, மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் குரியன் ஆகியோர் ஏற்கெனவே ராஜினாமா செய்துவிட்டனர். இந்த அமைச்சரவை மாற்றத்தில் புதிய முகங்கள் இடம் பெறும் என பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.எல்.முருகன் விஷயத்தில் இன்னும் சஸ்பென்ஸ்.. தமிழக பாஜக தலைவரா? வானதி சீனிவாசன் சொன்ன அந்த விஷயம்
மாநிலங்களவை
2029 மக்களவை தேர்தல்
காலியான ராஜ்யசபா சீட்
பயந்துபோன எல் முருகன்.. ராஜ்யசபா எம்பி + மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? பின்னணி
தமிழக பாஜக தலைவர்களுக்கு வாய்ப்பு?
தமிழிசை
மிக்சர் சாப்பிட்டது போதும்..மத்திய அமைச்சரவையில் மெகா மாற்றம்! சீட்டுகளை கலைத்துப் போடும் மோடி & கோ!
எம்பி தேர்தல்
3ஆவது அமைச்சர் எல்.முருகன்