நீட் சர்ச்சை எதிரொலி.. NTA-வில் அதிரடி மாற்றம்.. 600 நிபுணர்கள் நீக்கம்! மத்திய அரசு அதிரடி

  • டெல்லி: என்டிஏ எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகள் குறித்து சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், தேசிய தேர்வு முகமையில் மிக பெரிய மாற்றங்களை செய்து மத்திய கல்வி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி உத்தரவிட்டுள்ளார். அதன்படி தேசிய தேர்வு முகமையில் பணியாற்றி வந்த 600 நிபுணர்கள் நீக்கப்பட்டு, புதிய நிபுணர்கள் சேர்க்கப்பட உள்ளனர். மேலும், வினாத்தாள்களை சரிபார்க்க 4 கட்ட சரிபார்ப்பு முறை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

    Advertisement

    தேசிய தேர்வு முகமையான என்டிஏ நாடு முழுக்க பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. ஜேஇஇ தேர்வு, நீட், நெட் என பல்வேறு தேர்வுகளை இந்த அமைப்பு நடத்துகிறது. இருப்பினும், இந்த தேர்வுகளில் வினாத்தாள் லீக் ஆவது, கேள்வித்தாள்களில் பிழை என அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இது தேசியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    Advertisement

    600 பேர் நீக்கம்

    இந்தச் சூழலில் தான் மத்திய கல்வி துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, தேசிய தேர்வு முகமையில் மிக பெரிய மாற்றங்களை செய்து உத்தரவிட்டுள்ளார். NTAவின் தேர்வு குழுவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி 600 நிபுணர்கள் நீக்கப்பட்டு, புதிய நிபுணர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

    பாதுகாப்பு நடைமுறை

    தற்போதுள்ள நடைமுறைபடி வினாத்தாள்களை பல கட்டங்களில் ஆய்வு செய்யும் முறை இருக்கிறது. இந்நிலையில், பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் 4 4 கட்ட சரிபார்ப்பு முறையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி NTAவில் கூடுதலாக 20 முதல் 25 அதிகாரிகள் அடுத்த 2 முதல் 3 வாரங்களில் நியமிக்கப்பட உள்ளனர். அடுத்தகட்ட நியமன நடவடிக்கைகள் குறித்தும் கல்வி அமைச்சருடனான ஆலோசனை கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மேலும், NTA அலுவலகங்களின் பாதுகாப்பையும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக போர்க்கால முறையில் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலக பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை குழுக்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

    கட்டுப்பாடுகள்

    தேர்வுகளின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் தேசிய தேர்வு முகமை தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. ஜெஇஇ (மெயின்), நீட், சியூட், நெட் உள்ளிட்ட முக்கிய நுழைவு தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த தேர்வு மையங்களில் 24 மணி நேர பாதுகாப்பு, கம்யூட்டர் வழி தேர்வுகள், சிசிடிவி கண்காணிப்பு, சோதனை மற்றும் தேர்வு கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையையும் என்டிஏ எடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    பின்னணி

    கடந்த ஜூன் 2026ல் நடந்த நெட் தேர்வில் 3 பாடங்களில் ஏகப்பட்ட பிழைகள் இருந்தன. இதையடுத்து 3 பாடங்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அது தேசியளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், NTAவின் அனைத்து தேர்வு நடைமுறைகளையும் முழுமையாக ஆய்வு செய்து, 30 நாட்களுக்குள் திருத்த நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய கல்வி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த தேசிய தேர்வு முகமை தான் நீட் நுழைவு தேர்வையும் நடத்துகிறது. இந்த நீட் தேர்வில் கேள்வித்தாள் லீக் ஆனது குறித்து இந்தாண்டு மிக பெரிய போராட்டம் வெடித்தது. கரப்பான் பூச்சி கட்சி நடத்திய போராட்டத்திற்கு நாடு முழுக்க ஆதரவு வந்த நிலையில், அப்போது கல்வி துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியையும் ராஜினாமா செய்து குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Centre has ordered major reforms at the National Testing Agency amid repeated controversies over exam errors(மொத்தமாக மாறிய தேசிய தேர்வு முகமை தேர்வு): NTA Overhaul latest news in tamil.