மம்தா, கெர்ஜிவால், பினராயி விஜயன்.. ஒரே நாளில் அடுத்தடுத்து மாஜி முதல்வர்கள் கைது! பதற்றம்

  • டெல்லி: மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணாமுல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி இப்போது டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 தலைவர்களும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் எம்பி சாகேத் கோகலே தெரிவித்துள்ளார். இன்று ஒரே நாளில் டெல்லியில் மம்தா, கெஜ்ரிவால், பினராயி விஜயன், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் என 4 முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி இன்று டெல்லியில் போராட்டத்தை அறிவித்திருந்தது. தலைநகர் டெல்லியில் இன்று காலை முதலே பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது.

    Advertisement

    மம்தா

    இதற்கிடையே மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணாமுல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி இப்போது டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 தலைவர்களும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் எம்பி சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "மம்தாவும் நாங்கள் ஐந்து பேரும் அவரது இல்லத்திற்கு வெளியே டெல்லி போலீசார் மற்றும் சிஆர்பிஎஃப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளோம். சிறை கைதிகளை ஏற்றி செல்லும் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். எங்களை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பதும் தெரியவில்லை" என்று கூறியுள்ளார். இந்தியாவில் ஜனநாயகத்தின் செத்துவிட்டதையே இது காட்டுவதாக சாகேத் கோகலே விமர்சித்துள்ளார்.

    Advertisement

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. கரப்பான் பூச்சி கட்சியின் முக்கிய தலைவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்த போராட்டத்தில் மம்தா பங்கேற்கலாம் என்பதாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்..

    சரமாரி குற்றச்சாட்டு

    இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "நாங்கள் கடத்தப்பட்டு, இரண்டு மணி நேரம் போலீஸ் வாகனத்தில் சுற்றவிடப்பட்டோம். இன்று இளைஞர்களுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் நிகழ்வுகளைக் கண்டிக்கும் விதமாக, நான் இன்று இரவு கொல்கத்தா திரும்பாமல், திங்கள்கிழமை நடைபெறவுள்ள இந்தியா கூட்டணியின் பேரணியில் பங்கேற்கவுள்ளேன். இப்போது மாலை 4 மணி. எங்களை துவாரகா வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தர்ணா போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம்" என பதிவிட்டுள்ளார்.

    Advertisement

    மம்தா பானர்ஜி மட்டுமின்றி டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    கெஜ்ரிவால்

    டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டை சுற்றி காலையிலிருந்தே போலீசார் இருந்தனர். கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் வீட்டிலிருந்து வெளியே வர முயன்றபோது போலீசார் அவரை தடுப்பு காவலில் கைது செய்தனர். இது தொடர்பாக அவர், "நாட்டின் இளைஞர்கள் இந்த அடக்குமுறைக்கு அஞ்சமாட்டார்கள். வாக்கு திருட்டுக்கு எதிராகப் போராடுவோம். அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வந்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார்.

    Advertisement

    பினராயி விஜயன்

    கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி ஜான் பிரிட்டாஸ் ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டர். அவர்கள் சத்ரசால் மைதானத்தில் உள்ள தடுப்பு மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதேபோல திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்காரும் போராட்டத்தின்போது தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.

    English Summary

    Former West Bengal Chief Minister Mamata Banerjee and five Trinamool Congress leaders have reportedly been detained by Delhi Police(மேற்கு வங்க மாஜி முதல்வர் மம்தா பானர்ஜி கைது): Mamata Banerjee Detained latest news in tamil.