ஜானி ஜானி யெஸ் பாப்பா! SIR நோ பாப்பா! ஞானேஷ்குமார் நோ பாப்பா! டெல்லியில் மம்தா பாடிய ரைம்ஸ்!

  • டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தி வரும் போராட்டத்தில் ஜானி ஜானி யெஸ் பாப்பா பாடியது வைரலாகி வருகிறது.

    Advertisement

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஜானி ஜானி யெஸ் பாப்பா, எஸ்ஐஆர் நோ பாப்பா, ஹரீஷ்குமார் யெஸ் பாப்பா, ரெசிக்னேஷன் யெஸ் பாப்பா, ரிமூவ் யெஸ் பாப்பா, அரெஸ்ட் யெஸ் பாப்பா, சேவ் டெமாக்ரசி யெஸ் பாப்பா, சேவ் இந்தியா யெஸ் பாப்பா, ஞானேஷ்குமார் நோ பாப்பா என அவர் காமெடியாக தெரிவித்தார்.

    Advertisement

    வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகளில் சட்டவிரோதமான முறையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக வெளியான செய்தியை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன.

    டெல்லியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் டெல்லியில் ஜந்தர் மந்தரில் இன்றைய தினம் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைமையில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த போராட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்வதாக அறிவித்திருந்தார். அதன்படி அவர் இந்த போராட்டத்தில் சிஜேபிக்கு ஆதரவாக கலந்து கொண்டார். தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடத்தும் போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்தது. டெல்லியில் இணைய சேவை முடக்கப்பட்டது.

    Advertisement

    அது போல் மெட்ரோ ரயில்நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

    டெல்லி போராட்டத்திற்கு புறப்பட்டு செல்லும் அபிஜித் தீப்கே ஆக்ரோஷமாக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், "பிரதமர் மோடி பயந்துவிட்டார். பிரதமருக்கு ஏன் நாட்டின் இளைஞர்கள் மற்றும் மக்கள் மீது இவ்வளவு பயம்?

    ரயில் சேவை - இணைய சேவைகளை டெல்லியில் முடக்க வேண்டிய அவசியம் என்ன? டெல்லியில் என்னை கைது செய்தாலும் நியாயமான தேர்தலுக்காக போராட்டம் தொடரும்" என தெரிவித்துள்ளார்.

    முன்னதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி கட்சியினர் நடத்திய போராட்டத்திற்கும் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்திருந்தார்.

    Advertisement

    தற்போது இந்த ஞானேஷ்குமாருக்கு எதிரான போராட்டத்திற்கும் வந்த மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: "ஜானி ஜானி யெஸ் பாப்பா, எஸ்ஐஆர் நோ பாப்பா, ஹரீஷ்குமார் யெஸ் பாப்பா, ரெசிக்னேஷன் யெஸ் பாப்பா, ரிமூவ் யெஸ் பாப்பா, அரெஸ்ட் யெஸ் பாப்பா, சேவ் டெமாக்ரசி யெஸ் பாப்பா, சேவ் இந்தியா யெஸ் பாப்பா, ஞானேஷ்குமார் நோ பாப்பா" என அவர் காமெடியாக தெரிவித்தார்.

    English Summary

    West Bengal Ex CM Mamta Banerjee sang Johny Johny yes pappa SIR no Pappa rhymes in protest against Gyanesh Kumar.