மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை.. கர்நாடகாவிடம் திட்ட அறிக்கை கேட்ட மத்திய அரசு

  • டெல்லி: மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையேயில்லை என்று நாடாளுமன்றத்தின் பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியையும், கர்நாடகாவிற்கு ஹேப்பியையும் கொடுத்துள்ளது.

    Advertisement

    கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். இந்நிலையில் தான் காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் டிகே சிவக்குமார் உறுதியாக உள்ளார். மேகதாது அணை என்பது டிகே சிவக்குமாரின் சொந்த மாவட்டத்தில் அமைய உள்ளது. இதனால் அவர் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்.

    Advertisement

    மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்து திருத்தப்பட்ட விரிவான அறிக்கையை கர்நாடகா தயாரித்துள்ளது. இது விரைவில் மத்திய அரசிடம் வழங்கப்பட உள்ளது. இதற்கிடையே தான் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு மற்றும் தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தான் மேகதாது அணை குறித்து பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினார். அதாவது, ''உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் காவிரி நதிக்கு குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் அமைக்க கர்நாடகா, கீழ்கரை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா புதுச்சேரி உள்ளிட்டவற்றின் அனுமதியை பெற வேண்டும். மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் இந்த மாநிலங்களின் அனுமதியை கர்நாடகா பெற்றுள்ளதா? மேகதாது அணை கட்டும் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?'' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    Advertisement

    இந்த கேள்விக்கு மத்திய ஜல் சக்தி துறையின் மத்திய இணையமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். அதில், ''1018 ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் காவிரிக்கு குறுக்கே எந்த கட்டமைப்புகளையும் ஏற்படுத்த தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்டவற்றின் அனுமதியை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல் கடந்த 2007 ம் ஆண்டு காவிரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் பதினெட்டாவது பிரிவு சரியானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி எந்தவொரு மாநிலஙமும் தனதுக்கு எல்லைக்குட்பட்ட காவிரி நீர் பயன்பாட்டை முறையாக அனுபவிக்க உரிமை, அதிகாரம் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    இதனால் அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை கர்நாடகா சார்பில் மத்திய அரசிடம் 2019ல் சமர்ப்பிக்கப்பட்டது. இப்போது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிக்காட்டுதல்படி திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை சமர்பிக்கும்படி அது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது'' என கூறியுள்ளார்.

    English Summary

    Union Minister of Water Resources Raj Bhushan Choudhary stated, in response to a question raised by PMK MP Anbumani Ramadoss in Parliament, that the Tamil Nadu government's approval is not required to construct a dam at Mekedatu.