உலகில் வாழ ஆபத்தான நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் இருக்கு? பரபரப்பை கிளப்பிய லிஸ்ட்

  • டெல்லி: உலகம் முழுவதும் குற்றம் அதிகரிக்கும் நாடுகள் குறித்த பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் பப்புவா நியூ கினியா முதலிடத்தில் உள்ள நிலையில், வெனிசுலா, ஹைட்டி உள்ளிட்ட நாடுகளும் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் எங்கே உள்ளன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

    Advertisement

    Numbeo என்ற நிறுவனம் 2026ல் அதிகம் குற்றம் நடக்கும் நாடுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. ஏழ்மையான நிலையில் இருக்கும் நாடுகளிலேயே குற்றங்கள் அதிகம் நடக்கிறது. வறுமை, அரசியல் குழப்பம் நிலவும் நாடுகளிலேயே குற்றங்களும் அதிகம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பப்புவா நியூ கினியா

    இதில் முதலாம் இடத்தில் பப்புவா நியூ கினியா இருக்கிறது. வறுமை, வேலையின்மை, பழங்குடியினருக்கு இடையிலான மோதல்கள், போலீஸ் அதிகாரமின்மை ஆகியவை முக்கிய சவால்களாக உள்ளன. இரண்டாவது இடத்தில் வெனிசுலா இருக்கிறது. நீண்டகால பொருளாதார நெருக்கடி, பாதுகாப்பு குறித்த கவலைகளும் வெனிசுலாவில் பெரிய சிக்கலாக உள்ளது. கொள்ளை, குற்றங்கள், ஊழல் ஆகியவையும் முக்கிய பிரச்சனைகளாக உள்ளன.

    அடுத்த ஹைட்டி.! அரசியல் நிலையற்ற தன்மையும் ஆயுத கும்பல்களின் வன்முறையும் ஹட்டியில் பெரும் சவால்களாக உள்ளன. தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை உள்ளிட்ட குற்றங்கள் அதிகமாக நடக்கிறது. அடுத்த இடத்தில் இருப்பது ஆப்கானிஸ்தான்.. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஆசிய நாடு ஆப்கானிஸ்தான் தான். திருட்டு, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு பிரச்சினைகள் ஆப்கானிஸ்தானில் தலைவிரித்து ஆடுகிறது.

    Advertisement
    கொடியையே காணோமே.. இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் பட்டும் படாமல் பங்கேற்ற தவெக!

    தென்னாப்பிரிக்கா

    தென்னாப்பிரிக்கா இதில் 5வது இடத்தில் வருகிறது. கொலை, கொள்ளை, கேங் குற்றங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன. வேலையின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு முக்கிய காரணங்களாக உள்ளன. 6வது இடத்தில் ஹோண்டுராஸ் இருக்கிறது. போதைப்பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் ஆகியவை வன்முறை அதிகரிக்க பிரதான காரணமாக இருக்கிறது.

    டிரினிடாட் மற்றும் டொபாகோவில் துப்பாக்கிச் சூடு, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மோசமாக இருக்கம் சூழலில் அது 7வது இடத்தில் இருக்கிறது. பல ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு மோதல்கள் காரணமாக சிரியாவில் நிலைமை மோசமாக இருக்கும் நிலையில், அது 8வது இடத்தில் உள்ளது. ஜமைக்கா மற்றும் கயானா ஆகிய நாடுகள் முறையே 9 மற்றும் 10வது இடத்தில் இருக்கிறது.

    Advertisement
    அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக வழக்கு.. அக்.21 ஆம் தேதி விசாரணை

    இந்தியா

    தெற்காசிய நாடுகளை பொறுத்தவரை வங்கதேசம் அதிக குற்றம் நடக்கும் நாடுகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மார்க் 44.2 ஆக உள்ளது. அதே நேரத்தில் டெல்லியின் மார்க் 59.0 ஆகவும், உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரத்தின் மார்க் 58.2 ஆகவும் உள்ளது. பாகிஸ்தானின் மார்க் 42.2 ஆக உள்ளது. அந்நாட்டின் கராச்சி நகரம் 57.6 மார்க்கையும், ராவல்பிண்டி 52.0 மார்க்கையும் பெற்றுள்ளன.

    குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் என்ன?

    முன்பே குறிப்பிட்டது போல வறுமை, வேலையின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவை சமூக அழுத்தங்களை அதிகரிக்கக்கூடும். இந்த நாடுகளில் ஊழல் மற்றும் பலவீனமான போலீஸ் அமைப்பு இருப்பதால் குற்றவாளிகள் ஈஸியாக தப்பிவிடுகிறார்கள். இது குற்றங்கள் அதிகரிக்க பிரதான காரமாக இருக்கிறது.

    Topics: #world #india

    English Summary

    Numbeo’s 2026 crime rankings place Papua New Guinea at the top, followed by Venezuela and Haiti(உலகில் அதிக குற்றம் நடக்கும் நாடுகள்): Most Criminal Countries latest news in tamil.