இஸ்லாமியர்களே கரப்பான்பூச்சி போராட்டத்துக்கு செல்லக்கூடாது! அனைத்திந்திய இமாம் கூட்டமைப்பு வார்னிங்

  • டெல்லி: ''சில தேசவிரோத சக்திகள் நம் நாட்டின் அமைதியைக் குலைக்க விரும்புகின்றன. மக்களை தவறாக வழிநடத்தி நாட்டின் சூழலை கெடுப்பதற்கான ஒரு பெரிய சதித் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. டெல்லியில் இன்று மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் இஸ்லாமியர்கள், இமாம்கள் யாரும் பங்கேற்க வேண்டாம்'' என்று அனைத்திருந்திய இமாம் கூட்டமைப்பின் தலைமை இமாம் உமர் அகமது இலியாசி கூறியுள்ளார்.

    Advertisement

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்யக்கோரி இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி வழங்கவில்லை.

    Advertisement

    இருப்பினும் தடையை மீறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தயாராகி வருகின்றனர். இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும் டெல்லி எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளது.

    டெல்லிக்கும் போராட்டக்காரர்கள் நுழைவதை தடுக்க ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில், பயணிகள் ரயில் உள்ளிட்டவற்றின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்ற போலீசார், துணை ராணுவ படையினர் டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக அனைத்திந்திய இமாம் கூட்டமைப்பின் தலைமை இமாம் உமர் அகமது இலியாசி முக்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இன்று டெல்லியில் நடைபெறும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கி உள்ளார். இதுதொடர்பாக தலைமை இமாம் உமர் அகமது இலியாசி கூறியுள்ளதாவது:

    Advertisement

    ''நான் அனைத்து முஸ்லிம்களிடமும், குறிப்பாக மசூதிகளின் இமாம்களிடமும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நாட்டில் தற்போது நிலவும் சூழல் குறித்து உங்களுக்கு தெரியும். சில தேசவிரோத சக்திகள் நம் நாட்டின் அமைதியைக் குலைக்க விரும்புகின்றன. மக்களைத் தவறாக வழிநடத்தி நாட்டின் சூழலைக் கெடுப்பதற்கான ஒரு பெரிய சதித் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

    அக்டோபர் 10ம் தேதி (இன்று) நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அந்த அழைப்பு விடுக்கப்பட்ட விதம் குறித்து நான் அனைத்து முஸ்லிம்களிடமும் முக்கிய விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். இந்த போராட்டங்கள் அரசாங்கத்திற்கு எதிராகவே நடத்தப்படுகின்றன.

    Advertisement

    நாம் (முஸ்லிம்கள்) மற்றவர்களால் பயன்படுத்திக்கொள்ளப்பட வேண்டியவர்கள் அல்ல என்பதை இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன். இதுவரை முஸ்லிம்களாகிய நாம் இத்தகைய செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளோம். இது மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டிய தருணம். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் எந்த முடிவும் சரியானது அல்ல. எனவே, புத்திசாலித்தனமாகச் செயல்படுங்கள். இந்த போராட்டத்திற்கு முஸ்லிம்கள், இமாம்கள் யாரும் பங்கேற்க வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.

    English Summary

    Delhi Protest: Chief Imam of the All India Imam Organisation, Imam Umer Ahmed Ilyasi says, "I am making an appeal and request to all the Muslims and especially to the Imams of the mosques to stay away from the proposed protest on October 10 in Delhi’’.