மோடி அமைச்சரவையில் அந்த கட்சி வர போகுதாமே.. சீக்கிரமே வருது மிக பெரிய கேபினட் மாற்றம்!

  • டெல்லி: நரேந்திர மோடியின் தலைமையிலான, மத்திய அமைச்சரவையில் மிக விரைவிலேயே பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளிக்கு முன்பாக எந்த நேரத்திலும் அமைச்சரவை மாற்றம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், குறைந்தது 6 அமைச்சரவை பதவிகள் காலியாக இருப்பதால் மிக பெரிய மாற்றங்கள் வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    கடந்த 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. இருப்பினும், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மோடி தலைமையிலான என்டிஏ அரசு மூன்றாவது முறையாக அமைந்தது. 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்ற பிறகு கடந்த இரண்டரை ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் பெரியளவில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

    Advertisement

    மோடி அமைச்சரவை

    இருப்பினும், மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு மாற்றங்கள் செய்யப்படலாம் என கடந்த ஜூலை மாதமே தகவல் வெளியானது. இருப்பினும், சில காரணங்களால் அந்த மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இடையில் நீட் முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் மிக பெரியளவில் வெடித்ததால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

    இதற்கிடையே இப்போது சில மாதங்கள் கழித்து மீண்டும் அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய இணையமைச்சராக இருந்த எல். முருகன் செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்ததே இதற்கு காரணமாகும். தமிழகத்தில் பாஜகவின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், 2029 லோக்சபா தேர்தலுக்கு தயாராகவும் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக கூறி அவர் ராஜினாமா செய்தார்.

    Advertisement

    ராஜினாமா

    சமீபத்தில் தான் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ரவ்னீத் சிங் பிட்டு, ஜார்ஜ் குரியன் ஆகியோரும் அமைச்சரவையிலிருந்து விலகினர். மேலும், மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, பி.எல். வர்மா ஆகியோரின் மாநிலங்களவை பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவர்களை மீண்டும் வேட்பாளர்களாக பாஜக அறிவிக்கவில்லை. இதுவும் அமைச்சரவை மாற்றம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    அமைச்சர்கள்

    மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா டெல்லி பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ளார். பாஜகவில் ஒருவர் ஒரே நேரத்தில் ஒரு பதவியில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கொள்கை பின்பற்றப்படுவதால், அவர் மத்திய அமைச்சரவையிலிருந்து சீக்கிரமே விலக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. புதிதாக மாநில பாஜக தலைவர்களாக நியமிக்கப்பட்ட பங்கஜ் சௌத்ரி, ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோர் தொடர்ந்து அமைச்சர் பதவிகளில் நீடித்தாலும் அவர்களும் கூட பதவி விலகலாம் என சொல்லப்படுகிறது. இப்படி பல அமைச்சர்கள் கட்சி பணிகளுக்காகவே அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    மேலும், மோடி அமைச்சரவையில் எப்போதுமே முதல் 2.5 ஆண்டுகளுக்கு பிறகு மிக பெரிய மாற்றம் செய்யப்படுவது வழக்கம். முறையாக செயல்படாதவர்கள் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். புதுமுகங்களுக்கு வாய்ப்பு தரப்படும். மேலும், இலாகா மாற்றங்களும் கூட பெரியளவில் இருக்கும். கடந்த காலங்களிலும் கூட இதுவே தான் நடந்துள்ளது.

    அமைச்சரவை மாற்றம் நிச்சயம்!

    அதன்படி பார்த்தாலும் அமைச்சரவை மாற்றம் நிச்சயம் நடக்கவே போகிறது. கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஜேடியு ஆகிய கட்சிகளுக்கு வேறு முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சரவை தரப்படலாம். மேலும், மாற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும் அமைச்சரவை வாய்ப்பு தரப்படும் என தெரிகிறது.

    English Summary

    Reports suggest that Prime Minister Narendra Modi could carry out a major Union Cabinet reshuffle before Diwali(மோடி அமைச்சரவை மாற்றம்): Modi Cabinet Reshuffle Before Diwali in tamil.