ஈஸியாக பணிந்தது இல்லை மோடி அரசு.. இது இரண்டாவது முறை! தர்மேந்திர பிரதான் ராஜினாமா பின்னணி

  • டெல்லி: டெல்லியில் பல வாரங்களாக நீடித்த மாணவர் போராட்டம், இப்போது ஒரு வழியாக முடிவுக்கு வரும் சூழலை எட்டியுள்ளது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வைத்துள்ள இந்த போராட்டம் இந்திய அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக விவசாயிகள் போராட்டத்திற்கு பிறகு, மிக பெரிய மக்கள் போராட்டத்தால் மத்திய அரசு பின்வாங்கியுள்ளது.

    Advertisement

    2020ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் ஒரு ஆண்டுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Advertisement

    விவசாயிகள் போராட்டம்

    பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் அந்த போராட்டம் முடிவுக்கு வரவில்லை. அப்போது நாடு முழுக்க விவசாயிகளுக்கான ஆதரவு அதிகரித்து கொண்டே சென்றது. இதையடுத்து வேறு வழியின்றி பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். பின்னர் நாடாளுமன்றத்தில் அவை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டன. மேலும், விவசாயிகள் முன்வைத்த சில கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. மோடி அரசு 2014ல் பதவிக்கு வந்த பிறகு அது இதுபோல சட்டங்களை வாபஸ் பெறுவது இதுவே முதல்முறை.

    நீட்

    அதேபோல நீட் தேர்வு முறைகேடு, கல்வி அமைப்பில் சீர்திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் தொடங்கிய போராட்டம், படிப்படியாக நாடு முழுவதும் பரவியது. டெல்லியைத் தாண்டி மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலும் மாணவர்கள் தெருக்களில் இறங்கினர். மாணவர்கள் மட்டுமின்றி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தை ஒடுக்க போலீஸ் நடவடிக்கை எடுத்தபோதும், அதற்கு எதிரான விமர்சனங்களும் அதிகரித்தன.

    Advertisement

    அதிலும் குறிப்பாக கடந்த திங்கள்கிழமை மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அந்த சம்பவம் நாடு முழுக்க மாணவர்களுக்கான ஆதரவை பல மடங்கு அதிகரித்தது. இதன் விளைவாக, மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தது. தேர்வு சீர்திருத்தம் குறித்து உறுதிமொழிகளும் வழங்கப்பட்டன. இருப்பினும், தர்மேந்திர பிரதான் ராஜினாமாவுக்கு முதலில் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.

    தர்மேந்திர பிரதான்

    ஆனாலும், தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்பதில் இளைஞர்கள் மிக உறுதியாக இருந்தனர். இதையடுத்து வேற வழியின்றி தர்மேந்திர பிரதானை மத்திய அரசு ராஜினாமா செய்ய வைத்துள்ளது. இன்றைய தினம் அவர் ராஜினாமா செய்துள்ளார். இது மிக முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அரசின் அழுத்தம்

    விவசாயிகள் போராட்டமும், மாணவர்கள் போராட்டமும் வெவ்வேறு பிரச்சினைகளை பற்றியது என்றாலும் இரண்டிலும் ஒரு பொதுவான அம்சம் இருந்தது. அது, தொடர்ச்சியான மக்கள் அழுத்தம். இரண்டு போராட்டங்களிலும் ஆரம்பத்தில் அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால் போராட்டம் நீடித்ததும், பொதுமக்கள் ஆதரவு அதிகரித்ததும் அரசுக்கு அழுத்தமும் அதிகரித்தது.

    இந்த சம்பவம் ஒரு விஷயத்தை தெளிவாகக் காட்டுகிறது. அரசியல் கட்சிகளால் சாதிக்க முடியாத விஷயங்களை கூட மக்கள் போராட்டம் சாதிக்கிறது என்பதே ஆகும்.

    English Summary

    Narendra Modi makes dharmendra Pradhan to regisn: தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்த மோடி